5 மாதங்களில் 500 கொலைகள் நடந்ததுதான் தவெகவின் சாதனை- பிரேமலதா விஜயகாந்த்
மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரேமலதா அவர்கள் பேசியதாவது..,
தமிழ்நாட்டில் இந்த 5 மாதங்களில் 500 கொலைகள் நடந்ததுதான் தவெகவின் சாதனை. தமிழ்நாடு முழுவதும் வன்கொடுமைகள் நடப்பதும் சாதனையாக உள்ளது என விமர்சித்தார்.
மதுராந்தகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 5 வயது சிறுமி வீட்டில் புகுந்து வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
அண்ணன், தம்பி, தாய்மாமன், பெண்களுக்கு பாதுகாவலன் என பேசும் முதல்வர், பெண்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்தார்? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

மேலும், மக்கள் தங்களுக்கு வாக்களித்த நிலையில், ஏன் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவில்லை என விஜயிடம் கேட்டால், எந்த துறை குறித்து கேள்வி கேட்டாலும் ஆதவ் அர்ஜுனா பதில் சொல்கிறார்.
வெற்றி பெற்றால் என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டால் உதயநிதி, ஸ்டாலின், திமுக என விமர்சிக்கிறார் என்றார்.
தொடர்ந்து, மதுராந்தகத்தில் கோயில் முன்பு நின்று திமுக வெற்றி பெற்றால் பதவி விலகுவதாக ஆதவ் அர்ஜுனா சவால் விட்டுச் சென்றுள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் என்றும் துரோகத்தின் பக்கம் நிற்கமாட்டார்கள் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |