தீபாவளிக்காக சொந்த ஊர் திரும்பிய நபர் மீது துப்பாக்கிச்சூடு: ஜனாதிபதியின் பாதுகாவலர் என தகவல்
Army jawan, who was shot in the head during a dispute over bursting firecrackers, a member of the elite President's Bodyguard regiment: பட்டாசு வெடிக்கும் பிரச்சினையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபர், ஜனாதிபதியின் பாதுகாவலர் படைப்பிரிவைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்காக சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர் ஒருவரை, பட்டாசு வெடிக்கும் பிரச்சினையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார் அவரது பக்கத்து வீட்டுக்காரர்.
தீபாவளிக்காக சொந்த ஊர் திரும்பிய நபர்
உத்தரப்பிரதேசத்திலுள்ள கோபல்பூர் கடானா என்னுமிடத்தைச் சேர்ந்தவர் சௌரப் தோமர் (26). குடும்பத்துடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் சௌரப்.
தீபாவளியன்று இரவு, சௌரப் தனது குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருக்க, அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான தீரஜும் அவரது சகோதரர் மோனுவும் பட்டாசு வெடிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

சௌரபின் அண்ணனான வினீத்துக்கும் தீரஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட, சட்டென தனது துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார் தீரஜ்.
அவர் சுட்ட குண்டு, சுவரில் பட்டுத் தெறித்து, சௌரபின் தலையில் பாய்ந்துள்ளது.
உடனடியாக சௌரப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, மருத்துவர்கள் அவரது தலையில் பாய்ந்த குண்டை அகற்றியுள்ளனர்.
தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ள பொலிசார், தீரஜ் மற்றும் மோனுவைத் தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் பாதுகாவலர்
இந்நிலையில், சௌரப் ஜனாதிபதியின் பாதுகாவலர் படைப்பிரிவைச் சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சௌரப், கடந்த ஏழு ஆண்டுகளாக ஜனாதிபதி மாளிகையில் பணிபுரிந்துவருவதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.