இந்திய - இலங்கை உறவை பலப்படுத்தும் சந்திப்பு: இலங்கை ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டு விஜயம்
இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2024 டிசம்பர் 15 முதல் 17 வரை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி திசாநாயக்க, இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்முவைச் சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளுடன் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் முன்னேற்றும் மற்றும் பலப்படுத்தும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |