இலங்கை உள்ளாட்சி மன்ற தேர்தல் - ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடத்திற்குள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 2023 மார்ச்சில் கோரப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“எவ்வாறாயினும், அந்தக் காலத்தில் இருந்த பல கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இன்று இல்லை, சில கூட்டணிகள் கலைக்கப்பட்டுவிட்டன. இதனால், அந்த வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்பட்டு புதிதாக வேட்புமனுக்கள் கோரப்பட்டு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |