கொரோனா தடுப்பூசி பெறாதவர்களை மோசமான வார்த்தையால் விமர்சித்த பிரான்ஸ் ஜனாதிபதி... பதிலுக்கு எதிர்ப்பாளர்கள் செய்த விடயம்
கொரோனா தடுப்பூசி பெறாதவர்களை எரிச்சலடையச் செய்து தடுப்பூசி பெறும் நிலைக்கு ஆளாக்க இருப்பதாக தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், அதை வெளிப்படுத்துவதற்கு ஒரு மோசமான வார்த்தையை வெளிப்படுத்தினார்.
அதற்கு மக்கள் தரப்பிலும் எதிர்க்கட்சியினர் தரப்பிலுமிருந்து பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி பெறாதவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கைகளை கடுமையாக்க இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சனிக்கிழமையன்று, 100,000க்கும் அதிகமானோர் நாடு முழுவதிலும் ஒன்று திரண்டனர்.
தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே உணவகங்கள் முதலான இடங்களையும், பொதுப்போக்குவரத்தையும் பயன்படுத்தமுடியும் வகையில் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஒன்று திரண்டனர்.
நாடு முழுவதிலும், 105,200 பேர் பேரணிகளில் ஈடுபட்டதாக உள்துறை அமைச்சக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் பாரீஸில் 18,000 பேர் ஒன்று திரண்ட நிலையில், அவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும், மூன்று பொலிசார் லேசாக காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாரீஸில் ஒன்று திரண்டவர்கள், மேக்ரானுக்கு எதிராக, அவர் பயன்படுத்திய மோசமான வர்த்தையையே பயன்படுத்தி சத்தமிட்டுள்ளனர்.
மேலும், அதிகபட்சமாக Toulonஇல் சுமார் 6,000 பேர் ஒன்று திரண்டுள்ளனர். அவர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.