அவர்களும் மனிதர்கள் தானே... பாதிரியார்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஜேர்மன் திருச்சபைத் தலைவர்
திருச்சபையில் பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கும் நிலையில், பாலுணர்வு என்பது மனிதப் பண்புதானே என்று கூறியுள்ளார் ஜேர்மன் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் ஒருவர்.
Munich ஆர்ச்பிஷப்பான Cardinal Reinhard Marx என்பவர், கத்தோலிக்கத் திருச்சபைப் பாதிரியார்கள் திருமணம் செய்யக்கூடாது என்னும் விதிமுறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
கத்தோலிக்கத் திருச்சபைப் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், திருமணம் செய்ய அவர்களை அனுமதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
சில பாதிரியார்களைப் பொருத்தவரை, அவர்கள் திருமணம் செய்துகொள்வதுதான் நல்லது என்று கூறும் Cardinal Marx, வெறும் பாலுணர்வு காரணங்களுக்காக மட்டுமல்ல, அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில், தனிமையாக உணரமாட்டார்கள், அவர்களது வாழ்க்கைக்கும் அது நல்லதாக இருக்கும் என்கிறார் Cardinal Marx.
இப்படியே விடயங்கள் எப்போதும் தொடர முடியாது என்று கூறும் அவர், பாலுணர்வு என்பதும் மனிதனின் குணங்களில் ஒன்றுதானே என்கிறார்.