5 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டம்: அதிகாரிகளுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் உத்தரவு
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசு அதிகாரிகளுக்கு ரணில் உத்தரவு
இலங்கைக்கு ஒவ்வொரு வருடமும் 5 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேலை திட்டத்தை விரைவுபடுத்துமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகள் விரும்பி தங்க கூடிய பாரம்பரிய தோற்றம் கொண்ட கட்டிடங்கள் மற்றும் பங்களாக்களின் தங்குமிட வசதிகளை மேம்படுத்துவதற்கான அறிக்கையை ஆராய்ந்து விரைவாக தயாரிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சுற்றுலா பயணிகளின் கண்களில் படாத இடங்களை கண்டறியுமாறும் அதிகாரிகளுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சபை
மேலும் கொள்கை ரீதியிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சபை ஒன்றை உருவாக்கவும், புதிய முதலீடுகளுக்கு உகந்த சூழலை இலங்கைக்குள் உருவாக்குவதற்கான முதலீட்டு உட்கட்டமைப்பு கூட்டுத்தாபனம் (Investment Infrastructure corporation) ஒன்றை நிறுவவும் திட்டமிட்டு இருப்பதாக ரணில் சுட்டிக் காட்டியுள்ளார்.
9 மாகாணங்களை உள்ளடக்கிய சுற்றுலா சபைகளை உருவாக்கும் அவசியத்தையும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |