"அதல பாதாளத்தில் இருக்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவேன்" - ஜனாதிபதி ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம்!
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு சற்று முன்னர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம்
"ரணிலுடன் நாட்டை வென்ற ஐந்தாண்டுகள்" என்ற தலைப்பிலான விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் ஆரம்பமானது.
இந்த வைபவத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான அலி சப்ரி, பந்துல குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று காலை தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகளில் ஒரு பதிவில், ஜனாதிபதி கூறினார்: “இன்று, நான் எங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான எனது அறிக்கையை வெளியிடுகிறேன். என்னால் முடிந்ததை மட்டுமே நான் உறுதியளிக்கிறேன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம் நாட்டுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். நான் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவேன், அடுத்த ஐந்து வருடங்கள் இலங்கைக்கு வெற்றிகரமான காலமாக இருக்கும் என கூறியிருந்தார்.
LIVE NOW — My Five-Year Mission for Sri Lanka. https://t.co/NbIOJ3PYvz
— Ranil Wickremesinghe (@RW_SRILANKA) August 29, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஞ்ஞாபனத்தை உள்ளடக்கிய www.ranil2024.lk என்ற இணையத்தளமும் இன்று இந்த விழாவின் போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதல் கட்டமாக, 100,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், அதன் மூலம் வேலை சந்தை விரிவடையும். மேலும், புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |