போயிங் விமானம்... நாட்டின் பல பகுதிகளில் மாளிகைகள்: ட்ரம்பின் மொத்த சொத்து மதிப்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்பின் மொத்த சொத்து மதிப்பு தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்கில் மிகவும் வெற்றிகரமான
டொனால்டு ட்ரம்ப் தேர்தல் களத்தில் இறங்கும் முன்னரே, அமெரிக்காவில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவராக வலம் வந்தவர். அவரது தொழிலில் ரியல் எஸ்டேட், ஊடக தொழில்நுட்பம் மற்றும் பல அடங்கும்.
ட்ரம்பின் பெரும் சொத்து மதிப்பு என்பது ரியல் எஸ்டேட் துறையை நம்பியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் வட்டி விகிதங்கள் அதிகரித்ததாலும், வாடிக்கையாளர்கள் ஒன்லைனில் வாங்கத் தொடங்கியதாலும் ரியல் எஸ்டேட் துறை சிரமத்தை சந்தித்து வருகிறது.
உண்மையில் ரியல் எஸ்டேட் தொழிலை தமது தந்தையிடம் இருந்தே ட்ரம்ப் பெற்றுள்ளார். அவரது தந்தை பிரெட் டிரம்ப் நியூயார்க்கில் மிகவும் வெற்றிகரமான ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமாக கோல்ஃப் மைதானங்கள், மாளிகைகள், ஒரு ஒயின் தயாரிக்கும் ஆலை மற்றும் ட்ரம்ப் ஃபோர்ஸ் ஒன் என்ற 1991 போயிங் 757 விமானம் ஒன்றும் உள்ளது.
ஜனவரி 20ம் திகதி ஃபோர்ப்ஸ் பத்திரிகை பதிவு செய்துள்ள தரவுகளின் அடிப்படையில் டொனால்டு ட்ரம்பின் மொத்த சொத்து மதிப்பு 6.7 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரிய வந்துள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே தமது ஆதரவாளர்களிடம் விற்பனைப் பொருட்களால் பெரும் ஆதாயம் தேடிய ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மட்டுமே. ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் NFT விற்பனை செய்துள்ளார்.
$Trump என மீம் காயின் வெளியிட்டு, சுமார் 1 பில்லியன் டொலருக்கு விற்பனை செய்துள்ளார். மட்டுமின்றி அவரது $Trump மீம் காயினுக்கான சந்தை மதிப்பு 10 பில்லியன் டொலராகவும் அதிகரித்துள்ளது.
20 ஏக்கர் பரப்பளவில்
1982ல் முதல் முறையாக ஃபோர்ப்ஸ் 400 பட்டியலில் தனது தந்தை ஃப்ரெட்டுடன் ட்ரம்ப் இடம்பெற்றார். இருவரின் மொத்த சொத்து மதிப்பு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அப்போது மதிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்ப் தனது ஊடக நிறுவனத்தில் தனது 57 சதவீத பங்குகளை தனது திரும்பப் பெறக்கூடிய அறக்கட்டளைக்கு மாற்றியதை அடுத்து அவரது சொத்து மதிப்பு 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்ந்தது.
ட்ரம்பிடம் 10 மில்லியன் டொலர் மதிப்புள்ள அழகான மாளிகை உட்பட பல ஆடம்பர சொத்துக்கள் உள்ளன. இந்த மாளிகையானது 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
இதில் 58 படுக்கையறைகள், 33 குளியலறைகள், 12 நெருப்பிடங்கள், ஒரு ஸ்பா, ஒரு நீச்சல் குளம், ஒரு டென்னிஸ் கோர்ட் மற்றும் ஒரு கோல்ஃப் மைதானம் உள்ளன.
ட்ரம்ப்புக்கு நியூயார்க், மன்ஹாட்டன் மற்றும் வர்ஜீனியாவின் செயிண்ட் மார்ட்டின் ஆகிய இடங்களிலும் ஆடம்பரமான மாளிகைகள் உள்ளன. ட்ரம்புக்கு இருக்கும் கடன் தொகை 540 மில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |