ஒரே ஒரு நேரலை விவாதம்... ஜோ பைடன் பதவி விலக வலுக்கும் கோரிக்கை

Donald Trump Joe Biden Election
By Arbin Jun 29, 2024 06:45 AM GMT
Report

ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புடனான முதல் நேரலை விவாதத்தில் மொத்தமாக குழம்பி உளறிய ஜோ பைடனுக்கு சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெரும் விவாதப் பொருளாக

அமெரிக்காவில் முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்கள் நேரலை விவாதத்தில் கலந்துகொண்டு தங்கள் திட்டங்கள், சாதனை தொடர்பில் பகிர்ந்து கொள்வது தேர்தலின் முதன்மை பகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஒரே ஒரு நேரலை விவாதம்... ஜோ பைடன் பதவி விலக வலுக்கும் கோரிக்கை | Presidential Debate Joe Biden Urged To Step Down

இந்த நிலையில் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்ட முதல் நேரலை விவாதம் தற்போது நாட்டு மக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் ஜோ பைடன் தற்போது பதவி விலகுமாறு ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

81 வயதாகும் ஜோ பைடன் நேரலை விவாதத்தின் போது ட்ரம்புக்கு பதிலளிக்கும் வேளையில் அடிக்கடி திணறியதும், ஸ்தம்பித்துப் போனதும் மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மட்டுமின்றி டொனால்டு ட்ரம்பால் மிக மோசமாக ஜோ பைடன் விமர்சிக்கப்பட்டும் வருகிறார். தாம் என்ன பேசுகிறோம் என்பது ஜோ பைடனுக்கே தெரிய வாய்ப்பில்லை என்று ட்ரம்ப் ஏளனம் செய்துள்ளார்.

நேரலை விவாதம் முடிந்த உடனையே, ட்ரம்ப் வெற்றியாளர் என்று அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் ஜோ பைடனால் ஆட்சியை கைப்பற்ற முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

ஒரே ஒரு நேரலை விவாதம்... ஜோ பைடன் பதவி விலக வலுக்கும் கோரிக்கை | Presidential Debate Joe Biden Urged To Step Down

இதனிடையே, ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி அளிப்பவர்களில் முக்கியமான ஒருவரான Mark Buell, தேர்தல் வேட்பாளராக புதிய ஒருவரை அறிவிக்க நமக்கு வாய்ப்புள்ளதா என வினவியுள்ளார்.

இன்னொரு ஜனநாயகக் கட்சி ஆதரவாளர் தெரிவிக்கையில், ஜோ பைடன் விலகுவதே சிறப்பு, அதில் மாற்றுக்கருத்தில்லை என்றார். ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் மொத்தமாக ஜோ பைடனுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

மிச்செல் ஒபாமா

அவராகவே பதவியில் இருந்து விலகாத வரையில், அவரை நீக்குவது கடினம் என்றும் ஜனநாயகக் கட்சியில் ஒரு தரப்பு கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜோ பைடனுக்கு பதிலாக யார் பொறுப்புக்கு வர வாய்ப்பு என்பது குறித்த பட்டியலும் பத்திரிகை ஒன்று வெளியிட்டு பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.

முதலிடத்தில், ஜோ பைடனுக்கு ஆதரவாக அவர் பொறுப்பில் இருந்து விலகவில்லை என்றால் கமலா ஹாரிஸ் அடுத்த ஜனாதிபதியாக முன்னிலைப் படுத்தப்படுவார் என அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.

ஒரே ஒரு நேரலை விவாதம்... ஜோ பைடன் பதவி விலக வலுக்கும் கோரிக்கை | Presidential Debate Joe Biden Urged To Step Down

இரண்டாவது இடத்தில் மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மர், 3. போக்குவரத்து செயலாளர் பீட் புட்டிகீக், 4. பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, 5. கொலராடோ ஆளுநர் ஜாரெட் போலிஸ்,

6. கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம், 7. ஜார்ஜியா செனட்டர் ரபேல் வார்னாக், 8. மிச்செல் ஒபாமா, 9. மினசோட்டா செனட்டர் ஆமி க்ளோபுச்சார், 10. கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் ஆகியோர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US