ஜனாதிபதி தேர்தல் 2024: பிற்பகல் 2 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு
புதிய இணைப்பு
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான மாவட்ட மட்ட வாக்களிப்பு வீதம் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி பல மாவட்டங்களில் ஏற்கனவே 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதன்படி இன்று (21) பிற்பகல் 2 மணி நிலவரப்படி பல மாவட்டங்களின் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு.
- கொழும்பு - 60%
- கம்பஹா - 62%
- களுத்துறை - 60%
- நுவரெலியா - 70%
- காலி - 61%
- மாத்தறை - 64%
- அம்பாந்தோட்டை - 60%
- மன்னார் - 60%
- பதுளை - 59%
- இரத்தினபுரி - 60%
- கேகாலை - 60%
- அம்பாறை - 60%
- திருகோணமலை - 55%
- புத்தளம் - 57%
- மொனராகலை - 65%
- அனுராதபுரம் - 70%
- கண்டி - 65%
- மாத்தளை - 68%
- யாழ்ப்பாணம் - 49%
முதலாம் இணைப்பு
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான மாவட்ட மட்ட வாக்களிப்பு வீதம் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி பல மாவட்டங்களில் ஏற்கனவே 40 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பு பதிவாகியுள்ளது.
அதன்படி இன்று (21) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி பல மாவட்டங்களின் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு.
- நுவரெலியா - 45%
- காலி - 42%
- மாத்தறை - 35%
- குருநாகல் - 50%
- புத்தளம் - 42%
- அனுராதபுரம் - 50%
- பொலன்னறுவை - 44%
- மொனராகலை - 32%
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு 13,421 வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |