ஜனாதிபதி தேர்தல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை... அதற்குள் மேக்ரானுடைய பதவிக்கு போட்டியாளர் தயார்
பிரன்சில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே, மேக்ரானுடன் பணியாற்றிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
Abdul Saboor, Reuters
மேக்ரானுடைய பதவிக்கு போட்டியாளர் தயார்
பிரான்சில் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குகிறார் முன்னாள் பிரதமர் ஒருவர்.
பிரான்சில் மேக்ரான் அரசில் 2017ஆம் ஆண்டு அவரது முதல் பிரதமராக இருந்தவர் Édouard Philippe, 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அவர் பிரதமராக இருந்தார்.
அவர்தான் தற்போது 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளார்.
விடயம் என்னவென்றால், இமானுவல் மேக்ரான் தொடர்ந்து இரண்டுமுறை ஜனாதிபதியாக பதவி வகித்ததால், பிரான்ஸ் சட்டப்படி, அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |