நள்ளிரவுக்குள் எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்!
இன்று (21) ஆரம்பமான 2024 ஜனாதிபதித் தேர்தலின் முதல் முடிவுகள் நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, நாடு முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் வாக்குகளை எண்ணும் பணி இரவு 08.00 மணிக்குள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்கு எண்ணும் பணி அந்தந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு வரப்பட்ட பிறகே தொடங்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான எண்ணிக்கையிலான தபால்மூல வாக்காளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 712,318 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்காக பதிவு செய்துள்ளதாகவும், 6,200 பதிவு செய்யப்பட்ட தபால் வாக்காளர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் வாக்களித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
மேலும், நாடளாவிய ரீதியில் நியமிக்கப்பட்டுள்ள 429 தபால் நிலையங்களில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |