பிரித்தானிய மகாராணியாரின் முன் அரை நிர்வாணமாக தோன்றிய ஜனாதிபதியின் மகன்: அதிர்ந்துபோன பெற்றோர்
மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் நகைச்சுவை உணர்வு உலகம் அறிந்ததே.
ஒருமுறை, அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கச் சென்ற மகாராணியார் முன், அரை நிர்வாணமாக தோன்றிய ஜனாதிபதியின் மகனைக் கண்ட மகாராணியார் கூறிய வார்த்தைகள் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வெள்ளை மாளிகைக்கு அழைப்பு
1976ஆம் ஆண்டு, Gerald Ford என்பவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, பிரித்தானிய மகாராணியார் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
அப்போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை பின்னர் நினைவுகூர்ந்துள்ளார் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்த Betty Ford.
மகாராணியாரின் முன் அரை நிர்வாணமாக தோன்றிய ஜனாதிபதியின் மகன் !
மகாராணியாரை சந்திப்பது குறித்து முதலில் பதற்றமாக இருந்த Betty Ford, மகாராணியாரை சந்தித்தபின் சற்றே ரிலாக்ஸ் ஆக, ஜனாதிபதியும் அவரது மனைவியும், மகாராணியாரையும் அவரது கணவரையும் Yellow Oval Room என்னும் இடத்துக்கு லிஃப்ட் மூலம் அழைத்துச் செல்வதற்காக சென்றுள்ளார்கள்.
image credit:getty images
அனைவரும் லிஃப்ட் முன் நிற்க, லிஃப்டின் கதவுகள் திறக்க, லிஃப்டுக்குள் கண்ட காட்சியால் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போயிருக்கிறார்கள் அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மனைவியும்.
ஆம், லிஃப்டுக்குள், ஜனாதிபதியின் மகனான Jack Ford, பொத்தான் கூட போடாமல் அணிந்த சட்டையுடன், அரை நிர்வாணமாக நின்றிருக்கிறார்.
ஜனாதிபதி தம்பதியர் பதற, மகாராணியாரோ, சிரித்துக்கொண்டே, ’ஓ, அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் நினைக்கவேண்டாம், எங்கள் வீட்டிலும் ஒரு மகன் இப்படித்தான்’ என்று கூறினாராம்.
ஒருவேளை மகாராணியர் இளவரசர் ஆண்ட்ரூவைக் குறித்துச் சொல்லியிருக்கலாம், என தான் எண்ணியதாக கூறியுள்ளார் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்த Betty Ford.