இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மீது மலத்தை வீசவேண்டும் என்று கூறிய நபர் மீது நடவடிக்கை...
இளவரசர் ஹரியின் மனைவி மேகனை மோசமாக விமர்சித்த பிரித்தானியர் மீது நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.
மேகனை வெறுத்ததாக கூறிய பிரித்தானியர்
பிரபல பிரித்தானிய ஊடகவியலாளரான Jeremy Clarkson, டிசம்பர் மாதம், தி சன் பத்திரிகையில் ஹரி மேகன் தொடர்பான ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
ஹரியும் மேகனும் தங்கள் நெட்ப்ளிக்ஸ் தொடர் குறித்து பகிர்ந்துகொண்ட செய்தி கவனம் ஈர்த்த நேரத்தில், மேகனை Clarkson விமர்சித்த கட்டுரை வெளியாகியிருந்தது.
மேகனை தான் வெறுத்ததாக கூறியிருந்த Clarksonஉடைய கட்டுரை குறித்து, 25,100 பேர், பிரித்தானிய செய்தித்தாள் மற்றும் பத்திரிகை ஒழுங்கமைப்பிடம் புகார் தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Pic: Evan Agostini/Invision/AP
விமர்சிக்க பயன்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகள்
பிரித்தானியாவிலுள்ள அத்தனை நகரங்களின் தெருக்களிலும் மேகனை நிர்வாணமாக்கி நடக்கவைக்கவேண்டும் என்றும், மக்கள் அவரைப் பார்த்து, ‘அவமானம்’ என்று கத்தியபடி, மலத்தை அவர் மீது எறியும் நாள் என்று வரும் என்று தான் கனவு கண்டுகொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் Clarkson.
அந்த கட்டுரைக்கு கடும் எதிர்ப்பு உருவாகவே, தான் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் வரும் ஒரு காட்சியை மனதில் வைத்துத்தான் அப்படி எழுதியதாக தெரிவித்த Clarkson, ஹரி மேகன் தம்பதியரிடம் மன்னிப்புக்கோரி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார்.
ஆனால், ஹரியும் மேகனும், அது வெறுப்பின் காரணமாக தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரைகளின் ஒரு பகுதி என்று கூறி, அவர் மன்னிப்புக் கோரியதை ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், பிரித்தானிய செய்தித்தாள் மற்றும் பத்திரிகை ஒழுங்கமைப்பு ஹரி மேகன் மீதான விமர்சனம் தொடர்பில் தங்களுக்கு வந்த புகார்கள் குறித்து விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.
Pic: Amazon Prime Video