கோடை காலத்தில் Fridge Compressor வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கோடை காலத்தில் குளிர்சாதன பெட்டிகள் வெடிக்கும் நிகழ்வுகள் அதிகமாக நடைபெறும் நிலையில் அதற்கு முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடையில் குளிர்சாதனப் பெட்டி கம்ப்ரசர் ( Fridge Compressor) வெடிக்கும் நிகழ்வால் உயிருக்கு கூட ஆபத்தாக அமையலாம். எனவே குளிர்சாதன பெட்டியை வீட்டில் வைக்கும்போது சரியான இடத்தில் வைக்க வேண்டும்.
Fridge எங்கு வைக்க வேண்டும்?
Fridge Compressor பக்கத்தை சுவர் அல்லது காற்றோட்ட அமைப்பு இல்லாத திசையில் வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் கம்ப்ரசர் அதிக வெப்பமடைவது மட்டுமல்லாமல் கடுமையாக வெடிக்கும்.
இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் குளிர்சாதன பெட்டியை இந்த திசையில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
Fridge வெடிப்பதன் காரணம்?
* குளிர்சாதனப்பெட்டியை மின்சாரம் ஏற்ற இறக்கமான இடத்தில் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் ப்ரெஸ்ஸரில் அழுத்தம் அதிகரித்து வெடி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
* குளிர்சாதனப்பெட்டியில் நாம் பனிக்கட்டியை உறைய வைப்போம். சில மணிநேரங்களுக்கு ஒருமுறை நாம் குளிர்சாதனப்பெட்டியை திறப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது உறைபணியை மெதுவாக்க வேண்டும். வெப்பநிலையை அதிகரிக்க செய்ய வேண்டும்.
* குளிர்சாதனப்பெட்டியில் Compressor பகுதியில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை நிறுவனத்தின் சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
* குளிர்சாதனப் பெட்டியில் நீண்ட நேரம் எதையும் வைக்காமல், தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தால் அதனை திறப்பதற்கு முன்பு அணைத்து விட்டு இயக்க வேண்டும்.
* குளிர்சாதனப் பெட்டியில் வெப்பநிலையை ஒருபோதும் குறைந்த நிலைக்குக் கொண்டு வரக்கூடாது. ஏனென்றால், அதிக அழுத்தம் கொடுக்க நேரிட்டு சூடாக்கி வெடிக்க வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |