பாண் விலையில் முறைகேடு... கனடாவின் பிரபல உணவு நிறுவனத்திற்கு பல மில்லியன் அபராதம்
கனடாவில் பல ஆண்டுகளாக விலை நிர்ணயிப்பதில் முறைகேடு செய்து வந்துள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், கனடா பாண் என்ற பிரபல நிறுவனத்திற்கு 50 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச அபராதம் இது
கனேடிய நீதிமன்றம் ஒன்றால் விலை நிர்ணயம் செய்யும் முறைகேட்டுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதம் இதுவென கூறுகின்றனர். மேலும் கனடாவில் பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் முறைகேடு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டது, இதுபோன்ற மேலும் பல நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் எனவும் பட்டியலிட்டுள்ளனர்.
பெரும்பாலான கனேடிய மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றான பாண் விலையில் முறைகேடு செய்வது என்பது கடுமையான குற்றச் செயலாகும் என முக்கிய அதிகாரி ஒருவர் அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளார்.
CANADIAN PRESS/Doug Ives
மேலும், இதுபோன்ற விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், தங்களின் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிகோவை சேர்ந்த Grupo Bimbo நிறுவனத்தின் துணை நிறுவனமாக தற்போது செயற்பட்டுவரும் கனடா பாண் நிறுவனம் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருந்தது.
பாண் விலையில் முறைகேடு
விசாரணையில் தங்களது போட்டியாளரான Weston Foods நிறுவனத்துடன் இணைந்து பாண் விலையில் முறைகேடு செய்துள்ளதை கனடா பாண் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
விலை அதிகரிப்பு என்பது 2007ல் ஒருமுறையும் 2011ல் ஒருமுறையும் முன்னெடுத்ததாக கனடா பாண் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முறைகேடு நடக்கும் போது கனடா பாண் நிறுவனமானது Maple Leaf Foods என்ற நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்வதற்கான காரணம் குறித்து கனடியர்கள் சந்தேகம் கொள்வதற்கு இந்த முறைகேடு நல்ல காரணத்தை அளித்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |