கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு டீயின் விலை 340 ரூபாய்.., காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு
கொல்கத்தா விமான நிலையத்தில் விற்கும் டீயின் விலையை பார்க்கும்போது, தமிழ்நாட்டை விட மேற்கு வங்கம் மாநிலத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம், கொல்கத்தா விமான நிலையத்தில் டீயின் விலை 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் (The Coffee Bean and Tea Lea') சூடுநீரும், தேயிலை தூள் பையும் அடங்கிய ஒரு கப் டீ 340 ரூபாய்க்கு விற்கப்படுவதை இப்போதுதான் கண்டுபிடித்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் இதேபோல சூடுநீரும், தேயிலை பையும் அடங்கிய ஒரு கப் டீ ரூ.80 -க்கு விற்கப்பட்டது குறித்து ட்வீட் செய்திருந்தேன். பின்னர், அதுகுறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்தது.
தமிழகத்தை விட மேற்கு வங்கத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது என்று அப்பட்டமாக தெரிகிறது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |