'அனிமல்' பட வெற்றி விழாவில் ஆலியா பட் அணிந்திருந்த உடையின் விலை எவ்வளவு தெரியுமா?
'அனிமல்' பட வெற்றி விழாவில் நடிகை ஆலியா பட் அணிந்திருந்த உடையின் விலையின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
வெற்றி விழாவில் பிரபலங்கள்
இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்த 'அனிமல்' திரைப்படம் கடந்த டிசம்பர் 1 -ம் திகதி வெளியானது. இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்த போதிலும் நல்ல வசூலை கொடுத்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், ஆலியா பட் மற்றும் அவரது உறவினர் கலந்து கொண்டனர்.
ஆலியா பட் உடையின் விலை
பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்ட வெற்றி விழாவில் ஆலியா பட் தனது உடையினால் அனைவரையும் கவர்ந்தார். அவர் அணிந்திருந்த நீல கலர் நீண்ட கவுன் அனைவரையும் ஈர்த்தது. அந்த உடையை ஸாரியோ என்ற டிசைனர் வடிவமைத்துள்ளார்.
இந்த உடையானது பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதன் விலை 1,820 டொலர். இந்திய மதிப்பில் 1,51,408 ரூபாய் ஆகும். தற்போது, நீல நிற உடை அணிந்திருந்த ஆலியா பட்டின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |