இளவரசி கேட் வில்லியம் தம்பதியர் வெளியிட்டுள்ள அபூர்வ புகைப்படம்: ஆனந்தக்கண்ணீரில் ரசிகர்கள்
பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேட் தம்பதியர், தந்தையர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள ஒரு அபூர்வ புகைப்படம் அவர்களுடைய ரசிகர்களை ஆனந்தக்கண்ணீர் விடவைத்துள்ளது.
ஒரு அபூர்வ புகைப்படம்
ராஜ குடும்பத்தினருக்கென சில மரபுகள் உண்டு. அவ்வகையில், உடை கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு உண்டு. அதுவும் ராஜ குடும்பம் சார்பில் வெளியிடப்படும் புகைப்படங்களில் அவர்கள் மரபுப்படி உடை உடுத்தியுள்ளார்களா என்பதிலும் கவனம் செலுத்தப்படும்.
ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு, தான் புற்றுநோயால் அவதியுறும் நேரத்தில், இளவரசி கேட் எடுத்த ஒரு அபூர்வ புகைப்படம் ரசிகர்களை சொல்லொணா மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
We love you, Papa. Happy Father’s Day ? G, C & L
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) June 16, 2024
? The Princess of Wales, 2024 pic.twitter.com/kI9AFV2XmT
அந்த புகைப்படம், இளவரசி கேட் தன் குடும்பத்தினரை எடுத்த புகைப்படம். தன் கணவரும் பிள்ளைகளும் கடற்கரை ஒன்றில் நிற்கும்போது அவர்களை பின்னாலிருந்து எடுத்த அந்த புகைப்படத்தை, தந்தையர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ளனர் வில்லியம் கேட் தம்பதியர்.
வில்லியம் ஒரு கையால் தன் மகள் சார்லட்டை அணைத்துக்கொண்டிருக்க, அவளோ, தான் இளவரசி என்னும் எண்ணமெல்லாம் இல்லாமல் வளைந்து தன் ஒரு கையால் அப்பாவின் இடுப்பைப் பிடித்துக்கொண்டிருக்கிறாள்.
மகளும் மகன்களும் தனக்கு ஒரே மாதிரிதான் என்பதுபோல, மறுகையால் வில்லியம் ஜார்ஜை அணைத்துக்கொண்டிருக்க, ஜார்ஜ் தன் தம்பி லூயிஸை பாதுகாப்பாக பிடித்துக்கொண்டிருக்கிறார். என்றாலும், சார்லட்டைப் போலில்லாமல், நாங்கள் ஆண் பிள்ளைகள், வளைந்து நெளிந்தெல்லாம் அப்பாவைக் கட்டிக்கொள்ளமாட்டோம் என்பது போல, ஸ்டெடியாக நிற்கிறார்கள் ஜார்ஜும் லூயிஸும்.
மக்கள் இந்தப் படத்தை அப்படித்தான் வர்ணிக்கிறார்கள். அதுவும், அந்தப் புகைப்படம் இளவரசி கேட் எடுத்த புகைப்படம் என்பதால், இப்படி ஒரு இனிமையான புகைப்படத்தைப் பகிர்ந்ததற்கு இளவரசி கேட்டுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள் அவர்கள்.
மற்றொரு அரிய புகைப்படம்
Happy Father’s Day, Pa. W pic.twitter.com/pjGuB2iLQ1
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) June 16, 2024
இளவரசர் சார்லசும் தந்தையர் தினத்தையொட்டி, தானும் குழந்தை வில்லியமும் கால்பந்து விளையாடும் ஒரு அபூர்வ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆகமொத்தத்தில், இவ்வளவு நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு புகைப்பட விருந்தே அளித்துவிட்டார்கள் ராஜ குடும்பத்தினர் எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |