சுவிட்சர்லாந்தில் கேரட் தோட்டத்தில் கிடைத்த விலைமதிப்பில்லாத நகைகள்
சமீபத்தில், நார்வே நாட்டுப் பெண் ஒருவர், தோட்டத்தில் தவறவிட்ட தனது ஒற்றைக் கம்மலைத் தேடும்போது, 1,000 வருடப் பழமை வாய்ந்த விலைமதிப்பில்லா சில பொருட்களைக் கண்டுபிடித்தார்.
அதேபோல, வேல்ஸ் நாட்டில், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடிக்கொண்டிருந்த ஒரு குடும்பத்துக்கு, நிறைய ரோமர் கால நாணயங்கள் கிடைத்தன.
கேரட் தோட்டத்தில் கிடைத்த விலைமதிப்பில்லாத நகைகள்
சமீபத்தில், சுவிட்சர்லாந்திலுள்ள Güttingen என்னுமிடத்தில் அமைந்துள்ள அறுவடை செய்யப்பட்ட கேரட் தோட்டத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தேடிக்கொண்டிருந்த Franz Zahn என்பவருக்கு, வெண்கல நகை ஒன்றின் ஒரு பாகம் கிடைத்துள்ளது.
அதைப் பார்த்ததுமே அதன் மதிப்பை உணர்ந்துகொண்ட Franz Zahn, உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவலளித்துள்ளார்.
XING
உடனடியாக அங்கு வந்த புதைபொருள் ஆய்வாளர்கள், அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது, அங்கு 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகைகள் புதைந்திருப்பது தெரியவந்துள்ளது.
ரத்தினக் கற்கள், வெண்கல அம்பு, விலங்குகளின் பற்கள், மோதிரங்கள், தங்க வளையங்கள் என பல்வேறு நகைகள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
அவை, சுவிட்சர்லாந்தின் Frauenfeld என்னுமிடத்திலுள்ள அருங்காட்சியகத்தில் விரைவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
jewellerybusiness
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |