சிறுவன் பள்ளிக்குக் கொண்டுவந்த அந்த பொருள்: உடனடியாக குவிக்கப்பட்ட ராணுவ நிபுணர்கள்
இங்கிலாந்தில் நேற்று பள்ளிக்கு வந்த சிறுவன் ஒருவன் கொண்டு வந்த ஒரு பொருளைக் கண்ட தலைமை ஆசிரியை, உடனடியாக பள்ளியில் இருந்த அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு, பொலிசாருக்கு தகவலளித்தார்.
அந்த பொருள்?
அந்த சிறுவன் தன் பையில் வைத்து பள்ளிக்குக் கொண்டுவந்த அந்த பொருள், ஒரு கையெறிகுண்டு!
அந்தச் சிறுவனின் பையிலிருந்த கையெறிகுண்டைக் கண்ட பள்ளியின் தலைமை ஆசிரியை, பிள்ளைகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த கையெறிகுண்டை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வெளியே சென்றுள்ளார்.
தொலைவிலுள்ள மரம் ஒன்றிற்குப் பின்னால் அதை வைத்துவிட்டு பொலிசாரிடம் அவர் விவரத்தைக் கூற, உடனடியாக பள்ளிக்கு ராணுவ வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்துள்ளார்கள்.
Facebook
எக்ஸ்ரே கருவிகள் மூலம் அந்த குண்டை ஆராய்ந்த அவர்கள், அது பாதுகாப்பானது என உறுதி செய்துள்ளார்கள்.
அந்தச் சிறுவனின் குடும்பம், பல தலைமுறைகளாக அந்த கையெறிகுண்டு முதலான பல பொருட்களை குடும்பச் சொத்தாக பாதுகாத்து வைத்திருக்க, பெற்றோருக்குத் தெரியாமல் அதை பள்ளிக்கு எடுத்துக் கொண்டுவந்துள்ளான் அந்தச் சிறுவன்.
அதிர்ஷ்டவசமாக, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், பிள்ளைகள் தங்கள் பையில் என்ன வைத்திருக்கிறார்கள் என்பதை பெற்றோர் உறுதி செய்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்கள் ராணுவ நிபுணர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |