போரிஸ் ஜான்சனுக்கு பதில் இவர் பிரதமராகவேண்டும்: பிரித்தானிய பிரதமருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி

boris johnson
By Balamanuvelan Aug 11, 2021 07:55 AM GMT
Report

சமீபத்தில் பிரித்தானியாவில் ஒரு திரை மறைவு அரசியல் சம்பவம் நிகழ்ந்தது...

அது என்னவென்றால், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், சேன்ஸலரான ரிஷி சுனக்கை சுகாதாரச் செயலராக பதவியிறக்கம் செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.

சேன்ஸலர் ரிஷி சுனக், கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி எழுதிய ஒரு கடிதம் ஊடகங்களுக்கு லீக் செய்யப்பட்டதாக ஒரு புகார் எழுந்தது.

அதனால் கோபமடைந்த போரிஸ் ஜான்சன் பல அலுவலர்கள் முன்னிலையில் ரிஷி சுனக்கை சுகாதாரச்செயலராக பதவியிறக்கம் செய்துவிடுவதாக மிரட்டியதாக தகவல் வெளியானது.

ஆனால், மக்கள் எண்ணம் வேறு மாதிரி இருக்கிறது.

அவர்கள், போரிஸ் ஜான்சன் நீண்ட காலத்துக்கு பிரதமர் பதவியில் நீடிக்கமாட்டார் என்று நினைக்கிறார்கள். ஆக, அப்படி அவர் பதவியிலிருந்து விலகும்போது அவருக்கு பதில் ரிஷி சுனக் பிரதமராக வேண்டும் என பிரித்தானிய மக்கள் விரும்புகிறார்கள்.

போரிஸ் ஜான்சனுக்கு பதில் இவர் பிரதமராகவேண்டும்:  பிரித்தானிய பிரதமருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி | Prime Minister In Response To Boris Johnson

அதுவும், அடுத்த 12 மாதங்களுக்குள் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக ரிஷிசுனக் பிரதமராக பதவி ஏற்கவேண்டும் என 47 சதவிகித கன்சர்வேட்டிவ் கட்சியினர் கருதுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

சமீபத்தில் pollsters JL Partners என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலிருந்து, போரிஸ் ஜான்சனைவிட ரிஷி சுனக் அறிவிலும், திறமையிலும், நம்பகத்தன்மையிலும் சிறந்து விளங்குவதாக மக்கள் கருதுவது தெரியவந்துள்ளது.

மொத்தத்தில் 42 சதவிகிதம் பிரித்தானியர்கள் ரிஷி ஜான்சனைவிட சிறந்த பிரதமராக இருப்பார் என கருதுகிறார்கள். போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளவர்கள் 24 சதவிகிதத்தினர் மட்டுமே.

போரிஸ் ஜான்சனுக்கு பதில் இவர் பிரதமராகவேண்டும்:  பிரித்தானிய பிரதமருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி | Prime Minister In Response To Boris Johnson

போரிஸ் ஜான்சன் பதவி விலகும்போது ரிஷி பிரதமரக பதவியேற்கவேண்டும் என்று விரும்புபவர்கள் 56 சதவிகிதத்தினர். அப்படி விரும்பாதவர்கள் 18 சதவிகிதத்தினர் மட்டுமே.

கன்சர்வேட்டிவ் கட்சியினரில் 11 சதவிகிதம் பேர், இப்போதே ரிஷி பிரதமராகவேண்டும் என விரும்புகிறார்கள், 36 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் போரிஸ் ஜான்சனுக்கு பதில் ரிஷி பிரதமராகவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

அதைவிட ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் என்னவென்றால், பிரித்தானியர்களில் ஐந்தில் நான்கு பேர் (77 சதவிகிதத்தினர்), அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ரிஷிக்கு பிரதமர் பதவி கொடுக்கப்படவேண்டும் என விரும்புவதுதான்.

ஆக, தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, போரிஸ் ஜான்சன் ரிஷியை பதவியிறக்கம் செய்வதாக மிரட்டி, வாயை விட்டு மாட்டிக்கொண்டார். ரிஷியின் ஆதரவாளர்களோ அவரை தொடக்கூட முடியாது என்கிறார்கள். காரணம் மக்கள் ஆதரவு ரிஷிக்குதான்.

போரிஸ் ஜான்சனுக்கு பதில் இவர் பிரதமராகவேண்டும்:  பிரித்தானிய பிரதமருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி | Prime Minister In Response To Boris Johnson

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US