சுவிஸ் அமைப்பு ஒன்றின் கைப்பாவையா பிரித்தானிய பிரதமர்?: சமூக ஊடகங்களில் பரவும் ஒரு பரபரப்புச் செய்தி...
இனி இங்கிலாந்து கிடையாது, உலக பொருளாதார அமைப்பின் தலைவர்தான் ரிஷியை இனி கட்டுப்படுத்துவார் என்றும் கூறும் ட்வீட்கள் வெளியாகியுள்ளன.
அவற்றின் உண்மைத்தன்மை தெரியாத பலர் அந்த செய்திகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு அமைப்பு பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கைக் கட்டுப்படுத்துவைப் போன்ற ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இனி இங்கிலாந்து கிடையாது, உலக பொருளாதார அமைப்பின் தலைவரான Klaus Schwabதான் ரிஷியை இனி கட்டுப்படுத்துவார் என்றும் கூறும் ட்வீட்கள் வெளியாகியுள்ளன.
We always get our man in the end. pic.twitter.com/0dU0bz37Ck
— World Ecommunist Forum (@EcommunistForum) October 24, 2022
இதேபோன்ற செய்திகள் பேஸ்புக் போன்ற பிற சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.
ஆனால், உண்மையில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது உலக பொருளாதார அமைப்பு (World Economic Forum - WEF), அல்ல, World Ecommunist Forum என்னும் போலி அமைப்பாகும்.
இரண்டுமே வாசிப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளதால் பலர் ஏமாந்துபோயுள்ளார்கள்.
ஆகவே, அந்த ட்வீட்டை வெளியிட்டது உலக பொருளாதார அமைப்பு என்று நம்பி பலரும் அந்த செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள்.
— Strong Roots (Sue) (@StrongRoots11) October 24, 2022