அயோத்தியில் வரலாறு காணாத கோலாகலம்.., ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
அயோத்தி ராமர் கோயில் கருவறையில் உள்ள ராமர் சிலை ஜெய்ஸ்ரீ ராம் கோஷத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ராமர் கோயில் குடமுழுக்கு
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து இன்று காலை அயோத்தி விழாக்கோலம் பூண்டது. பெரிய பெரிய தொழிலதிபர்கள் முதல் பிரபலங்கள் வரை அயோத்தியில் குவிந்தனர்.
ராமர் பிரதிஷ்டை
இந்நிலையில், அயோத்திக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி சரியாக மதியம் 12.10 மணிக்கு அயோத்தி ஆலய கருவறையில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகளை தொடங்கினார்.
இந்த பூஜைகளை தென்தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆடலரசன் தம்பதி உள்பட 14 தம்பதிகள் முன்னின்று நடத்தினர்.
ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 84 வினாடி நேரம் ஆகும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.
ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வை பார்ப்பதற்கு சுமார் 8 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் ஏற்ப வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் கருவறை பூஜைகள் சுமார் 1 மணி வரை நடைபெற இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |