அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள்

United Kingdom Rishi Sunak
By Balamanuvelan Aug 09, 2022 10:45 AM GMT
Report

* தனக்கும், தன்னுடைய மனைவிக்கும் பல வித்தியாசங்கள் இருந்ததாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக்.

* என் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடிந்ததால் நான் அதிர்ஷ்டசாலி எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக், தன் மனைவி, பிள்ளைகள் குறித்து பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

The Sunday Times பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், தனது திருமண வாழ்வு மற்றும் பிள்ளைகள் குறித்த சில விடயங்களை வெளிப்படையாக தெரிவித்தார்.

42 வயதாகும் ரிஷி, இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயன மூர்த்தியின் மகளான அக்‌ஷதா மூர்த்தியை அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் சந்தித்தார்.

அப்போது தங்கள் இருவருக்கும் பல வித்தியாசங்கள் இருந்ததாக தெரிவிக்கிறார் ரிஷி. நான் எப்போதும் எல்லாவாற்றையும் மிகவும் நேர்த்தியாக அடுக்கி வைத்திருப்பேன், அக்‌ஷதாவோ எனக்கு நேர் எதிர், அந்த விடயத்தில் அவள் பயங்கரமானவள்.

நான் இதைச் சொல்வது கண்டிப்பாக என் மனைவிக்குப் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன், பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைப்பதில் அவள் ரொம்ப மோசம். அவளுடைய அறை முழுவதும் துணிகளும் ஷூக்களுமாக கிடக்கும் என்கிறார் ரிஷி.

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் | Prime Ministerial Candidate Rishi Sunak S Words

Image - newsleaflets

ரிஷி Stanford பல்கலைக்கழகத்தில் MBA படிக்கும்போது அவரும் அக்‌ஷதாவும் சந்தித்திருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு இந்தியாவின் பெங்களூருவில் குடும்பத்தார் சூழ திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள் இருவரும்.

தன் பிள்ளைகளான கிரிஷ்னா (11) மற்றும் அனௌஷ்கா (9) குறித்தும் பேசிய ரிஷி, என் பிள்ளைகள் பிறக்கும்போது நான் சொந்தத் தொழில் செய்துகொண்டிருந்ததால் அவர்களுடன் என்னால் அதிக நேரம் செலவிட முடிந்தது, அந்த விடயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்கிறார்.

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் | Prime Ministerial Candidate Rishi Sunak S Words

Photo:  zeenews

தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும்போதெல்லாம் எங்கே ஒரு குழந்தையைப் பார்த்தாலும் என்னையறியாமல் அந்தக் குழந்தையைத் தூக்குவதற்காக அதை நோக்கி என் கைகள் நீளும், என்று ரிஷி கூறுவதிலிருந்து அவருக்கு பிள்ளைகள் என்றால் எவ்வளவு பிரியம் என்பது புரிகிறது.

ரிஷி பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவாரா இல்லையா என்பது, அடுத்த மாதம், அதாவது செப்டம்பர் 5ஆம் திகதி தெரியவரும்.  

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் | Prime Ministerial Candidate Rishi Sunak S Words

Photo - thetimes


மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US