மன்னர் சார்லஸ் அளித்த நெருக்கடி... இறுதியில் இளவரசர் ஆண்ட்ரூ வெளியேற முடிவு
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, தமது முன்னாள் மனைவி சாரா பெர்குசன் வாங்கியுள்ள வீட்டுக்கு குடியேறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ வெளியேற முடிவு
விண்டசரில் அதிக பராமரிப்பு செலவு கொண்ட இல்லத்தில் இருந்து இருவரும் வெளியேறவே இறுதியில் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மன்னர் சார்லஸ் தமது சகோதரருக்கான உதவித்தொகையில் பெரும்பகுதியை ஏப்ரல் மாதம் முதல் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், இளவரசர் ஆண்ட்ரூ கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
@getty
இளவரசர் ஆண்ட்ரூ ஆண்டு தோறும் சுமார் 249,000 பவுண்டுகள் உதவித்தொகையாக பெற்று வந்துள்ளார். இந்த தொகையில் தான் பெரும்பகுதியை குறைக்க மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
5 மில்லியன் பவுண்டுகள்
மேலும், கடந்த ஆண்டு தான் சாரா பெர்குசன் 5 மில்லியன் பவுண்டுகள் தொகையில் லண்டனில் குடியிருப்பு ஒன்றை வாங்கினார். மட்டுமின்றி, அந்த குடியிருப்பானது தமது மகள்கள் பீட்ரைஸ் மற்றும் யூஜின் ஆகியோருக்கான முதலீடு எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Credit: Doug Seeburg
இதுவரை அந்த இல்லமானது வாடகைக்கு விடப்படாமல், தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வைத்திருந்தனர்.
விண்ட்சர் மாளிகைக்கு ஒப்பானதாக இல்லை என்றாலும், லண்டனில் அவர்களிக்கிருக்கும் ஒரே சொத்தும் இதுதான் என கூறப்படுகிறது.