ஊதியம் ரத்து... வீட்டை விட்டும் வெளியேற்றப்படலாம்: கடும் நெருக்கடியில் இன்னொரு பிரித்தானிய இளவரசர்
பிரித்தானிய ராஜ குடும்பத்தில் இருந்து இன்னும் சில மாதங்களில் சார்லஸ் மன்னரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நெருக்கடியில் இருக்கிறார் இளவரசர் ஆண்ட்ரூ.
ஊக்கத்தொகை ரத்து
இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அளிக்கப்பட்டுவரும் ஊக்கத்தொகையான 249,000 பவுண்டுகள் தொகையை ரத்து செய்யும் நடவடிக்கையும் மிகவிரைவில் முன்னெடுக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Credit: Ian Whittaker
இதனால் அவர் தற்போது தங்கியிருக்கும் விண்ட்சர் இல்லத்தின் செலவுகளை சமாளிக்க முடியாமல் தத்தளிக்க நேரிடும். மட்டுமின்றி, தம்மை ராஜ குடும்பத்தில் இருந்து சகோதரர் சார்லஸ் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என ஆண்ட்ரூவும் தெரிந்துகொண்டுள்ளார்.
மூத்த ராஜ குடும்பத்து உறுப்பினர் ஒருவர் இது தொடர்பில் நகைச்சுவையாக கூறியும் உள்ளார். இந்த நிலையில், தமது வருடாந்திர உதவித்தொகையானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் குறைக்கப்படும் என்ற தகவல் இந்த மாதம் அறிந்துகொண்டு கடும் அதிர்ச்சியில் உள்ளார் ஆண்ட்ரூ.
செலவுகளை சமாளிக்க முடியாத சூழலில் 30 அறைகள் கொண்ட விண்ட்சர் இல்லத்தில் இருந்து தாம் செப்டம்பர் மாதம் வெளியேற்றப்படலாம் என தமது நண்பர்களிடம் ஆண்ட்ரூ கூறியுள்ளார்.
Credit: Doug Seeburg
வெளியேற வேண்டும்
ஆனால் ஆண்ட்ரூ மட்டுமின்றி, முக்கியமான சில ராஜ குடும்பத்து உறுப்பினர்களுக்கு அளித்து வந்த ஊக்கத்தொகைகளிலும் சார்லஸ் மன்னர் கைவைத்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
இளவரசர் ஆண்ட்ரூ தமது முன்னாள் மனைவி சாராவுடன் விண்ட்சர் இல்லத்தில் தங்கி வருகிறார். தற்போது, செப்டம்பர் மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என கூறியுள்ளது, இருவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
@getty
உண்மையில், ஆண்ட்ரூ வெளியேற்றப்படவில்லை, அவரால் செலவுகளை சமாளிக்க முடியாமல் போவதால் இந்த மாற்றம் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராணியார் உயிருடன் இருக்கும் போது தனது தனிப்பட்ட வருவாயில் இருந்து மகன் ஆண்ட்ரூவுக்கு ஆண்டு தோறும் 249,000 பவுண்டுகள் தொகையை அளித்து வந்துள்ளார்.
ஆனால் தற்போது ராணியாரின் சொத்துக்கள் அனைத்தும் மன்னர் சார்லஸ் கட்டுப்பாட்டில் இருப்பதால்,
ஆண்ட்ரூ உட்பட சிலரின் ஆண்டு வருவாய் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி கடற்படையில் இருந்து பெறும் ஓய்வூதியத்தில் இனி செலவுகளை ஆண்ட்ரூ சமாளிக்க நேரிடலாம்.