இளவரசர் ஹரியைத் தொடர்ந்து பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மற்றொரு இளவரசர்?
இளவரசர் ஹரி தன் மனைவியுடன் பிரித்தானிய ராஜ அரண்மனையைவிட்டும், பிரித்தானியாவை விட்டும் வெளியேறியதைப் போலவே, மற்றொரு ராஜ குடும்ப உறுப்பினரும் வெளியேறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியைத் தொடர்ந்து பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மற்றொரு இளவரசர்
அவர், இளவரசர் ஆண்ட்ரூ! சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்ட நிலையிலும், தனது எல்லையை மீறி, பருவம் எய்தாத அமெரிக்க இளம்பெண் ஒருவருடன் பாலுறவு கொண்டதால் ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்தார் இளவரசர் ஆண்ட்ரூ.
மறைந்த மகாராணியார் அவர் மீது சில நடவடிக்கைகள் எடுத்தாலும், ஆண்ட்ரூவை குடும்பத்தைவிட்டு வெளியேற்றவில்லை. ஆனால், மகாராணியார் மறைந்து இளவரசர் சார்லஸ் மன்னரானதும், படிப்படியாக ஆண்ட்ரூவின் பொறுப்புகளைப் பறித்ததுடன், அவரை அரண்மனையிலிருந்தும் வெளியேற்றினார்.
Credit: Getty
இளவரசர் ஹரியை உற்றுக் கவனிக்கும் ஆண்ட்ரூ
இந்நிலையில், ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறினாலும், ராஜ குடும்பத்துடனான உறவை வியாபாரமாக்கியே வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தும் இளவரசர் ஹரி மற்றும் மேகனுடைய வாழ்க்கை ஆண்ட்ரூவின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆக, ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினாலும் பிரபலமாக இருக்கலாம் என்பதை அவர் ஹரி மேகன் வாழ்விலிருந்து கற்றுக்கொண்டுள்ளார்.
ஆகவே, ஆண்ட்ரூவும் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா போன்ற ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Credit: PA
ஆனால், ஆண்ட்ரூவுக்கு ஹரியைப்போல் நெட்ப்ளிக்ஸ் தொடரிலெல்லாம் ஆர்வமில்லை, அதற்கு பதில் ஏதாவது பிஸினஸ் அல்லது தொண்டு நிறுவனம் போல எதையாவது செய்யலாம் என ஆண்ட்ரூ கருதுவதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் ஆண்ட்ரூ பஹரைன் நாட்டுக்குச் சென்று அங்குள்ள ராஜ குடும்பத்தினரை சந்தித்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.