பிரித்தானிய இளவரசருக்கு பெருந்தொகை லஞ்சமாக அளித்த துருக்கி கோடீஸ்வரர்: வெளிவரும் பின்னணி
துருக்கி பெண் கோடீஸ்வரர் ஒருவர் அளித்த 750,000 பவுண்டுகள் லஞ்சத்தொகை காரணமாக சட்டச் சிக்கலுக்கு இலக்காகியுள்ளார் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ.
துருக்கியரான பெண் கோடீஸ்வரர் 77 வயதான Nebahat Isbilen எனபவருக்கு கடவுச்சீட்டு பெற உதவுவதற்காக 750,000 பவுண்டுகள் ஆண்ட்ருவுக்கு சன்மானமாக அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகையானது துருக்கியை சேர்ந்த இன்னொரு கொடீஸ்வரரால் கைப்பற்றப்பட்டு, அவர் மூலமாகவே இளவரசர் ஆண்ட்ரூ பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த விவகாரம் ஒரு முறைகேடு என்பதை உணர்ந்த Nebahat Isbilen, இளவரசர் ஆண்ட்ரூவை தொடர்புகொள்ள, அவர் குறித்த தொகையை திருப்பிச் செலுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், துருக்கியரின் திட்டமிட்ட மோசடிக்கு தாம் இலக்கானதாகவும் Nebahat Isbilen தெரிவித்துள்ளார். தற்போது இந்த முறைகேடு வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 77 வயதான இளவரசர் ஆண்ட்ரூ மட்டுமின்றி, அவரது முன்னாள் மனைவி சாரா பெர்குசன் என்பவரும் பிரதி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், இளவரசர் ஆண்ட்ரூ அல்லது சாரா பெர்குசன் ஆகிய இருவரும் முறைகேடில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பில் ஆதாரமேதும் சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
750,000 பவுண்டுகள் முறைகேடு தொடர்பில் இளவரசர் ஆண்ட்ரூ எவ்வாறு சிக்கினார் அல்லது அந்த மர்மம் குறித்து அரண்மனை வட்டாரத்தில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
துருக்கி கோடீஸ்வரரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி இந்த Nebahat Isbilen. இவரது கணவர் அரசியல் காரணங்களுக்காக துருக்கியில் சிறையில் அடைக்கப்பட, 87 மில்லிய டொலர் சொத்துக்களுடன் இவர் பிரித்தானியாவில் குடியேறியுள்ளார்.
மேலும், துருக்கி தொழிலதிபரான Selman Turk என்பவரை நம்பி அந்த தொகையை Nebahat Isbilen ஒப்படைத்துள்ளார். ஆனால் தம்மை ஏமாற்றி சுமார் 50 மில்லியன் டொலர் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக Nebahat Isbilen லண்டன் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை இன்னமும் தொடங்கப்படாத நிலையில், Nebahat Isbilen முன்வைத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது முன்னாள் மனைவி சாரா ஆகியோருக்கு கணிசமான தொகை வழங்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.