ஒருவரால் மட்டுமே அரண்மனையில் இருந்து ஆண்ட்ரூவை வெளியேற்ற முடியும்: அது மன்னர் சார்லஸ் அல்ல
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ தாம் தங்கியிருக்கும் ராஜ குடும்பத்து மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து வரும் நிலையில், மன்னர் சார்லசுக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
இளவரசர் ஆண்ட்ரூ தொடர்ந்து மறுப்பு
இளவரசர் ஆண்ட்ரூ தற்போது 30 படுக்கையறை கொண்ட மாளிகை ஒன்றில் தமது முன்னாள் மனைவியுடன் வசித்து வருகிறார். குறித்த மாளிகையில் இருந்து வெளியேறும் பொருட்டு, மன்னர் சார்லஸ் தரப்பில் இருந்து பலமுறை அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கெடுவும் அளிக்கப்பட்டது.
Shutterstock
ஆனால் மன்னரின் கோரிக்கையை ஏற்க இளவரசர் ஆண்ட்ரூ தொடர்ந்து மறுத்து வருகிறார். தொடர்புடைய மாளிகையில் கடந்த 20 ஆண்டுகளாக இளவரசர் ஆண்ட்ரூவே வசித்து வருகிறார்.
ஆனால் தற்போது அந்த மாளிகையை வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் குடும்பத்தினருக்கு அளிக்க மன்னர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அந்த மாளிகையை இளவரசர் ஆண்ட்ரூ நீண்ட கால குத்தகைக்கு எடுத்துள்ளார்.
மேலும், ராணியார் எலிசபெத்தின் தாயார் மறைவுக்கு பின்னர், இந்த மாளிகை இளவரசர் ஆண்ட்ரூ வசம் வந்துள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில், இளவரசர் ஆண்ட்ரூ தரப்பில் தெரிவிக்கையில், குத்தகை ஒப்பந்தமானது இன்னும் பல தசாப்தங்களுக்கு மேல் செல்லுபடியாகும் எனவும்,
அவரை அந்த மாளிகையில் இருந்து வெளியேற்றும் அதிகாரம் மன்னர் சார்லஸ் வசம் இல்லை எனவும், ஆனால் அரண்மனை சான்சலர் முடிவு செய்தால் மீற முடியாது எனவும் கூறுகின்றனர்.
அதிகாரம் மன்னர் சார்லஸ் வசம் இல்லை
இளவரசர் ஆண்ட்ரூ தமது பெயரிலேயே குத்தகை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இன்னும் 90 ஆண்டுகள் வரையில் அந்த ஒப்பந்தமானது செல்லுபடியாகும். மேலும் கிரவுன் எஸ்டேட்டுக்கும் இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் அது எனவும், இதனால் மன்னர் சார்லஸ் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் கூறுகின்றனர்.
Credit: wire / getty
இருப்பினும், இளவரசர் ஆண்ட்ரூ ஒப்புக்கொள்ளும் சாதகமான நடவடிக்கையால் மட்டுமே அந்த மாளிகையை மீட்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர். ராஜ குடும்பத்து செலவுகளை குறைக்கும் நோக்கில் மன்னர் சார்லஸ் எடுத்துள்ள நடவடிக்கையே, ஆண்ட்ரூவை அந்த மாளிகையில் இருந்து வெளியேற்றி, தொடர்புடைய மாளிகையை இளவரசர் வில்லியத்திடம் ஒப்படைப்பது என்பது.
மட்டுமின்றி, பராமரிப்பு செலவுகளுக்காக இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அளிக்கப்பட்டு வந்த 249,000 பவுண்டுகள் தொகையும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாளிகையை பராமரிக்க ஆண்ட்ரூ தடுமாறி வருவதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, அந்த மாளிகை இனி வில்லியம் வசம் ஒப்படைக்கப்படும் என்பதை நேரிடையாக ஆண்ட்ரூவிடம் கூறியிருந்தால், சாதகமான முடிவை அவர் முன்னெடுக்கலாம் எனவும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.