அரைகுறை ஆடையில் பெண்களோடு சுற்றுலா சென்ற பிரித்தானிய இளவரசர்! இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்
இங்கிலாந்தின் இளவரசரான ஆண்ட்ரு பெண்களோடு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன் ஆண்ட்ரூ. இவர் இளவரசர் சார்லசுக்கு தம்பியும் ஆவார். இவரின் மேல் பல பாலியல் குற்றங்கள் உள்ள நிலையில் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இளவரசர் ஆண்ட்ரூ அரைகுறை ஆடையில் பெண்களோடு உல்லாசமாக சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில் குழந்தை பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெஃப்ரீ எப்ஸ்டீனும் உடன் இருந்துள்ளார்.
இது தாய்லாந்தில் நாட்டின் Phuket தீவில் உள்ள ரிசார்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய விஐபிகள் அடிக்கடி சுற்றுலா செல்ல இந்த விடுதிக்கு வருவது வழக்கமாகும்.
அந்தவகையில் இளவரசர் ஆண்ட்ரூ தங்கி இருந்த ஹோட்டலின் ஒரு இரவுக்கான கட்டணம் 4 ஆயிரம் பவுண்ட்களாகும். கடந்த 2001ஆம் ஆண்டு விர்ஜினா குய்ஃப்ரேவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த சுற்றுலா நிகழ்ந்துள்ளது.
ஆனால் இளவரசர் ஆண்ட்ரூ இதனை மறுத்ததோடு அவருக்கும் ஜெஃப்ரீ எப்ஸ்டீனுக்கு இடையிலான உறவில் சட்டவிரோத நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இளவரசர் ஆண்ட்ரூ தங்கள் விடுதிக்கு வந்ததை குறித்து மேனேஜர் கூறியதாவது, எளிமையான தோற்றத்தோடு இருந்ததால் அவர் இளவரசர் என்பது எனக்கு தெரியவில்லை. அவருடன் நண்பர்கள், பாதுகாப்பாளர்கள் என சிலர் உடன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.