அடம் பிடிக்கும் இளவரசர் ஆண்ட்ரூ... மின் இணைப்பை துண்டிக்கும் முடிவுக்கு வந்த சார்லஸ் மன்னர்
இளவரசர் ஆண்ட்ரூ தங்கியிருக்கும் 30 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான மாளிகையில் இருந்து வெளியேற மறுப்பதால், மன்னர் சார்லஸ் இறுதி முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சார்லஸுக்கு அதிகாரம் இல்லை
மன்னர் சார்லஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தும், இளவரசர் ஆண்ட்ரூ கண்டுகொள்ள தவறியதை அடுத்தே, அவர் தங்கியிருக்கும் மாளிகையின் எரிவாயு மற்றும் மின்விநியோகத்தை துண்டிக்க சார்லஸ் மன்னர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
@getty
விண்ட்சரில் அமைந்துள்ள ராஜ குடும்பத்துக்கு சொந்தமான மாளிகையில் இருந்து வெளியேற இளவரசர் ஆண்ட்ரூ மறுத்து வருகிறார். தம்மை அந்த மாளிகையில் இருந்து வெளியேற்ற மன்னரும் சகோதரருமான சார்லஸுக்கு அதிகாரம் இல்லை எனவும் ஆண்ட்ரூ கூறி வருகிறார்.
ஆனால் இதுவரையான கோரிக்கைகளுக்கு மாறாக, ஆண்ட்ரூ மீது நடவடிக்கை எடுக்கவே மன்னர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, மாற்று வழிகள் ஏதும் இல்லை என்றால், தம்முடனான உறவை முறித்துக் கொள்ள மன்னர் சார்லஸ் முடிவெடுக்கலாம் என்ற அச்சத்தையும் ஆண்ட்ரூ வெளிப்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
செப்டம்பர் மாதம் வரையில் கெடு
முடிசூட்டு விழா முடிவுக்கு வந்துள்ளது, இனி மன்னர் தரப்பு நடவடிக்கை எடுக்க தாமதிக்காது என ஆண்ட்ரூவுக்கு தெரியும் என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பு. இளவரசர் ஆண்ட்ரூவை ஃபிராக்மோர் மாளிகைக்கு அனுப்பி விட்டு, விண்ட்சர் மாளிகையில் வில்லியம்- கேட் குடும்பத்தை குடியமர்த்த சார்லஸ் திட்டமிட்டுள்ளார்.
@getty
அரண்மனை அதிகாரிகள் தரப்பு இளவரசர் ஆண்ட்ரூவுக்கு செப்டம்பர் மாதம் வரையில் கெடு அளித்திருந்தனர்.
ஆனால் பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டனர். தற்போது ஆண்ட்ரூவை வெளியேற்ற மின்சாரத்தை துண்டிக்கும் நிலைக்கு அரண்மனை நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது என்றே கூறுகின்றனர்.