பனிச்சறுக்கு விளையாடும் இளவரசர் ஹரியின் மகன்: மேகன் பகிர்ந்துள்ள வீடியோ
இளவரசர் வில்லியம் ராஜ குடும்ப பணி செய்யும் உறுப்பினர்களில் ஒருவர் என்பதால், அவரது பிள்ளைகள் குறித்த செய்திகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டே இருக்கும்.
ஆனால், இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறிவிட்டதால், அவரது பிள்ளைகளுடைய புகைப்படங்கள் அபூர்வமாகவே உள்ளன.
சொல்லப்போனால், பலருக்கு இளவரசர் ஹரி, மேகன் தம்பதியரின் பிள்ளைகளான ஆர்ச்சி, லிலிபெட்டின் முகம் தெரியுமா என்பது கூட சந்தேகமே!
இந்நிலையில், தனது மகனான குட்டி இளவரசர் ஆர்ச்சி, தன் தந்தையுடன் பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மேகன்.

பனிச்சறுக்கு விளையாடும் இளவரசர் ஆர்ச்சி
இளவரசர் ஹரிக்கு முதல் குழந்தை பிறந்த நேரத்தில், ஹரியின் மாமியார் குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.
இப்போது பார்த்தால், அந்தக் குழந்தை வளர்ந்து தன் அப்பாவான இளவரசர் ஹரியுடன் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருக்கிறான்.
ஆம், குட்டி இளவரசர் ஆர்ச்சிக்கு இப்போது ஆறு வயதாகிறது.

தந்தையும் மகனும் பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ ஒன்றை நேற்று சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ள இளவரசர் ஹரியின் மனைவியான மேகன், ஆர்ச்சி சீக்கிரமாகவே பனிச்சறுக்கு செய்வதை கற்றுக்கொண்டதாகவும், அது தன்னை மிகவும் பெருமையடையச் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேகனை 4.5 மில்லியன் பேர் பின்தொடரும் நிலையில், அவர் பகிர்ந்த வீடியோ வைரலாகிவருகிறது.