இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல... 15 நாடுகளுக்கு மன்னர்: ஒரு சுவாரஸ்ய தகவல்
பிரித்தானிய மகாராணியாரின் மறைவுக்குப் பின் இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராகிறார்.
உண்மையில், இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல, மேலும் 14 நாடுகளுக்கும் மன்னராகிறார்.
பிரித்தானிய மகாராணியாரின் துயர மறைவுக்குப் பின் பிரித்தானியாவின் மன்னராகிறார் இளவரசர் சார்லஸ்.
FLASH: CHARLES BECOMES KING OF THE UK, CANADA, AUSTRALIA, NEW ZEALAND, AND 11 OTHER COUNTRIES
— BNO News (@BNONews) September 8, 2022
ஒரு சுவாரஸ்ய செய்தி என்னவென்றால், இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல, மொத்தம் 15 நாடுகளுக்கு மன்னராகிறார்.
ஆம், கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜமைக்கா, பஹாமாஸ், கிரெனாடா, பாப்புவா நியூகினியா, சாலமோன் தீவுகள், துவாலு, செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சண்ட் மற்றும் கிரெனாடைன்ஸ், பெலிஸ், ஆன்டிகுவா மற்றும் பார்புடா மற்றும் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய 14 நாடுகளுக்கும் மன்னர் இளவரசர் சார்லஸ்தான்!