இளவரசர் சார்லஸிற்கு என்ன ஆச்சு? லண்டன் வந்த போது அதை கவனீத்தீர்களா? புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியில் மக்கள்
இளவரசர் சார்லஸ் லண்டனில் இருக்கும் பப்பிற்கு வந்த போது, அவருடைய கைவிரல்கள் வீங்கப்பட்ட நிலையில் இருந்ததால், இணையவாசிகள் பலரும் அவருக்கு என்ன ஆனது என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள், கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது. வரும் ஜுன் மாத கடைசிக்குள், கட்டுப்பாடுகளை அனைத்தையும் தளர்த்திவிட வேண்டும், மக்கள் அனைவரும் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்பது தான் அரசின் குறிக்கோளாக உள்ளது.
ஆனால், சமீப நாட்களாக, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருவதால், ஜுன் மாத கடைசியில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படுவது கேள்வி குறி தான் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், வணிகவளாகங்களை இளவரசர் சார்லஸ் பார்வையிட்டார். அப்படி லண்டனில் இருக்கும் பப் ஒன்றிற்கு தனது மனைவி கமிலாவுடன் வந்தார்.
அப்போது அவர் அங்கிருந்த பீர்ரை பிடித்து கொஞ்சம் குடித்த அவர் அதன் பின் அதை செய்தியாளர்களுக்கு காட்டினர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. இதைக் கண்ட இணையவாசிகள் பலர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
ஏனெனில், இளவரசரின் கை விரல்கள் வீங்கப்பட்ட நிலையில் இருந்தது. இது குறித்து இணையவாசி ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த புகைப்படத்தில் இளவரசர் சார்ஸ் அவர் நலமாக இருக்கிறாரா? ஓ மை காட், அவரது கை விரல்கள் மிகவும் வீங்கியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அது கூகுளில் அதிகம் தேடப்படும் சொற்களாக மாறிவிட்டது. கைவிரல்கள் வீக்கம் குறித்து பிரித்தானியா மக்கள் அதிகம் கூகுளில் தேட ஆரம்பித்துவிட்டனர்.
கைகள் மற்றும் விரல்கள் வீங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும், இளவரசர் கை விரல்கள் வீங்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
எனவே இது முதல் முறை அல்ல, கடந்த 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பயணத்தின் போது அவரது கைவிரல்கள் வீங்கியிருந்தன. 2019-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சென்ற போதும், அவரது கைகள் பெரிதாக இருப்பதைக் காண முடிந்தது, வெப்பம் மற்றும் நீண்ட தூர விமான பயணம் காரணமாக அவரது வீரல்கள் வீங்கியிருக்கலாம் என்று அப்போது கூறப்பட்டது.
இது போன்ற கைவீக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், ஒரே இடத்தில், அதிக நேரம் இருப்பது மற்றும் அதிக உப்பு கொண்ட உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் வரலாம் என்று NHS வலைத்தளம் கூறுகிறது.
பெரும்பாலும் இது மருந்துகளின் பக்க விளைவுதான், ஆனால் இது சிறுநீரகம், கல்லீரல் அல்லது இதயம் தொடர்பான பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
NHS வலைத்தளம் வீக்கம் தானாகவே குறைய வேண்டும் என்றும் அது இல்லையென்றால் மக்கள் தங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், விரல் நுனியில் தொடங்கி, உள்ளங்கை வரை மசாஜ் செய்ய வேண்டும்,
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, நடைபயிற்சி போன்ற மென்மையான உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.