இளவரசர் சார்லசை இன்றும் கூனிக்குறுக வைக்கும் கமீலாவுடனான அந்த இரகசிய தொலைபேசி அழைப்பு
பிரித்தானிய இளவரசர் சார்லஸும் அவரது இரகசிய காதலியான கமீலாவும் பேசிக்கொண்ட ஒரு தொலைபேசி உரையாடல், இன்றும் இளவரசர் சார்லஸை கூனிக்குறுக வைப்பதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அது 1989ஆம் ஆண்டு... இளவரசர் சார்லஸ் தன் மனைவி டயானாவுடனும், கமீலா தன் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் போவ்ல்ஸ் என்பவருடனும் வாழ்ந்துவந்த காலகட்டம் அது. ஒரு நாள் இளவரசர் சார்லஸும் கமீலாவும் இரகசியமாக தொலைபேசியில் பேசிக்கொண்டார்கள், தங்கள் அழைப்பு இரகசியமாக பதிவு செய்யப்படுகிறது என்ற உண்மை தெரியாமல்... நீங்கள் இல்லாமல் என்னுடைய வாரத்தை துவங்க முடியாது என கமீலா கூற, கொஞ்சம் அந்தரங்கமாக பதில் கூறுகிறார் சார்லஸ். தொடர்ந்து அந்தரங்கமாக பேசிக்கோள்ளும் இருவரும், அடுத்து எங்கே, எப்போது சந்திப்பது என திட்டமிடுகிறார்கள்.
அந்த தொலைபேசி அழைப்பு பின்னாட்களில் வெளியானபோது, அரண்மனை மட்டுமல்ல, நாடே அதிர்ந்தது. சார்லஸின் மனைவி டயானா, அந்த அழைப்பு அருவருப்பாக இருந்ததாக கூறியிருந்தார்.
ஆனால், அவரே அதேபோல ஜேம்ஸ் கில்பி (James Gilbey) என்னும் ஒருவருடன் பேசிய மற்றொரு தொலைபேசி அழைப்பும் 1989ஆம் ஆண்டு சிக்கியிருந்தது வேடிக்கை. ஜேம்ஸிடம், சார்லஸ் தன் வாழ்வை நரகமாக்கிக்கொண்டிருப்பதாகவும், தான் கவலையாகவும் வெறுமையாகவும் உணர்வதாகவும் டயானா கூற, ஜேம்ஸோ என் செல்லமே கண்ணே என டயானாவை கொஞ்சிக்கொண்டிருந்ததை பிறகு உலகமே கேட்டது.
ஆனால், டயானாவும் சார்லஸும் பிரிய, கமீலாவும் ஆண்ட்ரூவும் பிரிய, பின்னர் சார்லஸும் கமீலாவும் திருமணம் செய்துகொண்டாலும், தான் அன்று கமீலாவுடன் பேசிய அந்த தொலைபேசி அழைப்பு இன்னமும் இளவரசர் சார்லஸை கூனிக்குறுக வைப்பதாக அவரது நண்பரான Howard Hodgson என்பவர் தெரிவித்துள்ளார்.
சார்லஸ் இன்னமும் தன் தாயான மகாராணியாருக்கு தன்னால் ஏற்பட்ட அவமானத்தை எண்ணி வெட்கப்படுவதாகவும், தன் பிள்ளைகளுக்கும், கமீலாவின் பிள்ளைகளுக்கும் ஏற்படுத்திய வலிக்காக ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் Hodgson.