அரச குடும்ப பொறுப்புக்கு திரும்ப மாட்டோம்! பிரித்தானியா மகாராணியிடம் உறுதிபடுத்திய இளவரசர்
பிரித்தானியா அரச குடும்பத்தின் பொறுப்புக்கு திரும்ப மாட்டோம் என இளவசர் ஹாரி-மேகன் தம்பதி மகாராணியிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக Buckingham அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Buckingham அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இளவசர் ஹாரி உடனான உரையாடல்களைத் தொடர்ந்து, இருவரும் அரச குடும்பத்தின் பணியிலிருந்து விலகுவதால், பொதுச் சேவையுடன் தொடர்புடைய பொறுப்புகள் மற்றும் கடமைகளைத் தொடர முடியாது என்பதை பிரித்தானியா மகாராணி உறுதிப்படுத்தியுள்ளார்.
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் ஆகியோரால் நடத்தப்பட்ட கௌரவ இராணுவ நியமனங்கள் மற்றும் Royal patronages போன்ற அதிகாரங்கள் கடைமைகள் தற்போது மகாராணயிடம் ஒப்படைக்கப்படும்.
பிறகு இந்த அதிகாரங்கள் கடைமைகள் அரச குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் இளவசர் ஹாரி-மேகன் முடிவால் வருத்தப்படுகையில், இருவரும் எப்போதும் மிகவும் விரும்பப்பட்ட உறுப்பினர்களாக இருப்பார்கள் என Buckingham அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
A Buckingham Palace statement on The Duke and Duchess of Sussex ➡️https://t.co/nl7RiZmGiZ
— The Royal Family (@RoyalFamily) February 19, 2021
அரச குடும்பத்தின் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு இளவசர் ஹாரி-மேகன் முடிவெடுத்ததை தொடர்ந்து, அவர்கள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய 12 மாத கால அவகாசத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான உரையாடல்களுக்குப் பிறகு இப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Buckingham அரண்மனை குறிப்பிட்டுள்ளது.