இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடிய பிரித்தானிய இளவரசர்: வைரலான புகைப்படங்கள்
பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் இந்திய சுற்றுப்பயணத்தில் கிரிக்கெட் வீரர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
உற்சாக வரவேற்பு
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரித்தானிய இளவரசர் எட்வர்டிற்கு மிகுந்த உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டி20 இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.
போட்டிக்கு முன்பாக மைதானத்தில் தோன்றிய இளவரசர் வீரர்களை சந்தித்து பேசினார். குறிப்பாக, இரு அணிகளின் தலைவர்களான ஜோஸ் பட்லர் மற்றும் சூர்யகுமார் ஆகியோருடன் மகிழ்ச்சியாக உரையாடினார்.
அதேபோல் தெற்காசியாவிற்கான வர்த்தக ஆணையர் மற்றும் மேற்கு இந்தியாவிற்கான பிரித்தானிய துணை உயர் ஆணையர் ஆகியோரிடம் இளவரசர் எட்வர்ட் பேசினார்.
புகைப்படங்கள்
மேலும் இளவரசர் பாடசாலை மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
முன்னதாக, பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான பகிரப்பட்ட உறவுகளைக் கொண்டாடவும், இளைஞர்களை ஊக்குவிக்கவும், முறைசாரா கல்வியின் நன்மைகளை ஊக்குவிக்கவும் பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 4 வரை இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
இந்தியாவில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், எடின்பர்க் பிரபுவின் சர்வதேச விருதை விளம்பரப்படுத்துவதற்காக மும்பை மற்றும் டெல்லிக்கு அவர் பயணம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |