தந்தையைப் போலவே தோற்றமளிக்கும் இளவரசர் ஜார்ஜ்: இன்று பிறந்தநாள்
பிரித்தானிய இளவரசரும், வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியமுடைய மூத்த மகனான ஜார்ஜ், இன்று தனது 13ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இளவரசர் ஜார்ஜுக்கு இன்று பிறந்தநாள்
மன்னராட்சி தொடரும் நிலையில், தந்தையைப் போலவே எதிர்கால மன்னராகும் வாய்ப்பு கொண்ட குட்டி இளவரசரான ஜார்ஜ், இன்று தனது 13ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர் தங்கள் சமூக ஊடகப்பக்கத்தில் ஜார்ஜின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
Happy 13th Birthday, George! 🎉 pic.twitter.com/HjLZO3hl5Q
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) July 22, 2026
அந்த புகைப்படத்தில், இளவரசர் வில்லியம் சிறுவயதில் எப்படி இருந்தாரோ, ஜார்ஜும் அதேபோல இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அதேபோல, சமீபத்தில் தன் தாயாகிய இளவரசி கேட்டுடன் ஜார்ஜ் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அவர் கிட்டத்தட்ட தன் தாய் உயரத்துக்கு வளர்ந்துவிட்டதையும் ஊடகங்கள் குறிப்பிடத்தவறவில்லை.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஜார்ஜுக்கும் இது வாழ்வில் ஒரு முக்கியமான தருணம்.
அதாவது, தன் தந்தையைப் போலவே, அவர் படித்த அதே எல்ட்டன் கல்லூரியில் இந்த ஆண்டு இணைய இருக்கிறார் ஜார்ஜ்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |