இளவரசர் வில்லியமுடைய எதிர்கால ஆசை: நிச்சயம் நடக்காது என்று அடித்துச் சொன்ன ஹரி
பிரித்தானிய இளவரசர் வில்லியம் ஒரு விடயத்துக்காக ஆசைப்பட, உடனே, அது நிச்சயம் நடக்காது என அவரது தம்பியாகிய இளவரசர் ஹரி கூறிய ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் வில்லியமுடைய ஆசை
ஒருநாள் இளவரசர்கள் வில்லியமும் ஹரியும், தங்கள் எதிர்கால கனவுகள் குறித்து, தங்கள் தாயாகிய இளவரசி டயானாவிடம் பேசிக்கொண்டிருந்தார்களாம்.
அப்போது, இளவரசர் வில்லியம், அம்மா, நான் வளர்ந்ததும் ஒரு பொலிசாக ஆகி உங்களை பாதுகாத்துக்கொள்வேன் என்று கூறினாராம்.
உடனே, ஒரு கணம் கூட தயங்காத இளவரசர் ஹரி, ஓ! அது உன்னால் முடியாது என்று கூறினாராம். அதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார். நீதான் மன்னராக வேண்டுமே, ஆகவே, உன்னால் பொலிசாக ஆகமுடியாது என்றாராம் ஹரி.
Image: The Princess of Wales
இளவரசர் ஜார்ஜுடைய ஆசை
பொலிசாக ஆகவேண்டும் என்ற ஆசை வில்லியம் குடும்பத்தின் இரத்தத்திலேயே உள்ளது போலிருக்கிறது.
காரணம், அவரது மகனான குட்டி இளவரசர் ஜார்ஜுக்கும் பொலிசாக ஆகவேண்டும் என்றுதான் ஆசையாம்.
அவர் வைத்திருக்கும் பொம்மைகள் கூட பொலிஸ் பொம்மை, பொலிஸ் கார் என்றுதான் இருக்குமாம்.
Image: 2022 Karwai Tang
சொல்லப்போனால், ஒருமுறை, கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் தனக்கு என்ன வேண்டும் என ஜார்ஜ் எழுதிய கடிதத்தை வில்லியமிடம் அவர் கொடுத்தாராம். அதில், எனக்கு ஒரு பொலிஸ் கார் வேண்டும் என்று எழுதியிருந்ததாம்.
சாதாரண மக்களுக்கு இளவரசியாகவேண்டும், மன்னராகவேண்டும் என்று ஆசை. மன்னராக இருப்பவர்களுக்கோ சாதாரண மனிதர்கள் போல வாழ ஆசை. வேடிக்கைதான்!
Image: Anwar Hussein/Getty Images
Image: Karwai Tang/WireImage

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.