பிரித்தானிய மன்னரின் முடிசூட்டு விழாவில் குட்டி இளவரசரின் முக்கிய பங்கு! பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு
குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது தாத்தாவின் முடிசூட்டு விழாவில் மிக முக்கிய பங்கு வகிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
குட்டி இளவரசரின் முக்கிய பங்கு
மே 6-ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் முடிசூட்டப்படுவார். இந்த நிகழ்வின் போது இளவரசர் ஜார்ஜ் வகிக்கும் முக்கிய பங்கை பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
முடிசூட்டு விழாவின் போது, முழுமையாக 8 ஆண்களைக் கொண்ட Pages of Honour குழுவில் ஒருவராக ஒன்பது வயதான குட்டி இளவரசரும் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டரை மணி நேரம் நடக்கும் இந்த விழாவின்போது அவர் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி காமிலாவின் அங்கிகளை வைத்திருப்பார்.
Getty Images
அரியணைக்கு நேரடி வரிசையில் இரண்டாவதாக இருக்கும் ஜார்ஜ், எதிர்காலத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தனக்கு என்ன நடக்கவிருப்பத்தை இப்போதே காணும் வாய்ப்பு என கூறலாம்.
பேஜஸ் ஆஃப் ஹானர்
கமிலாவின் பேரன்களான 13 வயது Gus மற்றும் Louis Lopes மற்றும் 12 வயதான Freddy Parker Bowles ஆகியோரும் பேஜஸ் ஆஃப் ஹானர் பாத்திரத்தை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவரது மருமகன் ஆர்தர் எலியட் (11) குழுவில் சேருவார் என கூறப்படுகிறது.
மன்னரைப் பொறுத்தவரை, அவரது பேஜஸ் ஆஃப் ஹானரில் இளவரசர் ஜார்ஜ், லார்ட் ஆலிவர் சோல்மண்டேலி (13), நிக்கோலஸ் பார்க்லே (13) ரால்ப் டோலேமாச்சே (12) மற்றும் சார்லஸின் தெய்வ மகன் எட்வர்ட் ஆகியோர் அடங்குவர்.
Getty Images
முடிசூட்டு விழா
முடிசூட்டு விழா நெருங்கிவரும் நிலையில், வார இறுதி கொண்டாட்டங்களுக்கு இன்னும் பல திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மே 6 முதல் 'கன்சார்ட்' என்ற பட்டம் கைவிடப்பட்டு, கமிலா 'ராணி' என்று அழைக்கப்படுவார் என்று நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்லே ஆகியோர் கலந்து கொள்வார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Getty Images