யூரோ கால்பந்து! யாருமே நினைத்த பார்க்காத நேரத்தில் கோல் அடித்த இங்கிலாந்து! வாயடைத்து போன குட்டி இளவரசர் சார்ஜ்
யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், யாருமே நினைத்து பார்க்காத நேரத்தில், கோல் அடித்ததைக் கண்டு குட்டி இளவரசர் சார்ஜ் அப்படியே வாயடைத்து போய்விட்டார்.
ஐரோப்பிய கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கிடையேயான இந்த போட்டி லண்டனில் இருக்கும் Wembley மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஒரு மிகப் பெரிய கால்பந்து கோப்பையை இங்கிலாந்து வென்று 55 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், அந்த ஏக்கம் இன்றாவது தீருமா என்று ஒட்டு மொத்த இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Prince George! ????????????????????? pic.twitter.com/gpvs6iVOnO
— John Stevens (@johnestevens) July 11, 2021
அதை நிரூபிக்கும் வகையில், ஆட்டம் துவங்கிய 1.57-வது நிமிடத்திற்குள்ளே இங்கிலாந்து வீரர் Luke Shaw அற்புதமாக கோல் அடித்து மிரட்டினார்.
இதை யாருமே எதிர்பார்க்கவேயில்லை, போட்டி துவங்கி இத்தாலி வீரர்கள் யோசிப்பதற்குள்ளே, Luke Shaw தனது அணிக்கான கோல் கணக்கை துவங்கியதால், அங்கிருந்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.
குறிப்பாக இந்த போட்டியை பார்க்க இளவரசர் வில்லியம், கேட் தங்களுடைய 7 வயது மகனான குட்டி இளவரசர் ஜார்ஜ் உடன் வந்தனர். Luke Shaw இப்படி ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலே கோல் வரும் என்று அவர்களும் எதிர்பார்க்காத காரணத்தினால், கோல் அடித்த பின்பு, சற்று நிமிடம் குட்டி இளவரசர் வாயடைத்து போனார்.
அப்போது அருகில் இருந்த வில்லியம் மற்றும் கேட் மிடில்டன், கை தட்டி உற்சாகப்படுத்தினர். அதன் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.