மன்னர் சார்லசைவிட அதிக சொத்து மதிப்பு கொண்ட நபர்: ராஜ குடும்பத்துக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?
மன்னர் சார்லசைவிட அதிக சொத்து மதிப்பு கொண்ட இளைஞர் ஒருவர், கடந்த ஆண்டில் பிரித்தானியாவில் 40 வயதுக்குக் கீழுள்ளவர்களிலேயே அதிக பணக்காரர் என்ற புகழை பெற்றுள்ளார்.
மன்னர் சார்லசைவிட அதிக சொத்து
அப்படி மன்னர் சார்லசைவிட அதிக சொத்து மதிப்பு கொண்ட அந்த நபரின் பெயர் Hugh Grosvenor (34).
விடயம் என்னவென்றால், கடந்த ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 10.1 பில்லியன் பவுண்டுகளாக இருந்த நிலையில், அவருக்கு 243 பில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆக, இப்போது அவருடைய சொத்து மதிப்பு 9.8 பில்லியன் பவுண்டுகள். ஆனால், 243 பில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்பட்ட நிலையிலும், அவரது சொத்து மதிப்பு, மன்னர் சார்லசுடைய சொத்து மதிப்பை விட அதிகமாகவே உள்ளது.
மன்னர் சார்லசுடைய சொத்து மதிப்பு 640 மில்லியன் பவுண்டுகள்.
உண்மையில், Hugh Grosvenorஇன் சொத்துக்கள், அவரது தந்தை அவருக்காக விட்டுச் சென்ற சொத்துக்கள் ஆகும்.
இந்த Hugh Grosvenor,குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் ஆர்ச்சியின் ஞானத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |