முதியவரைப் பார்த்து விலகிப்போ என சத்தமிட்ட இளவரசர் ஹரி: அதிர்ச்சியில் அழகிய காதலி எடுத்த முடிவு
இளவரசர் ஹரியைக் காதலித்த அழகிய இளம்பெண் ஒருவர் அவரைப் பிரிந்தது ஏன் என்பது குறித்த தகவல் ஒன்றை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் Tina Brown என்னும் ராஜ குடும்ப எழுத்தாளர்.
கிறிஸ்துமஸ் தினத்தில் நிகழ்ந்த சம்பவம்
இளவரசர் ஹரியும், கிரெஸிடா (Cressida Bonas) என்ற அழகிய இளம்பெண்ணும் இரண்டு ஆண்டுகள் காதலித்துள்ளார்கள். ஆனால், ஹரியின் சில செயல்கள், இவரைத் திருமணம் செய்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என கிரெஸிடாவை யோசிக்கவைக்கவே, காதலரைப் பிரிந்துவிட்டார் அவர்.
வளர்ந்துவரும் நடிகையாக இருந்த கிரெஸிடா, இளவரசர் ஹரி மற்றும் சில உறவினர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள்.
உணவருந்தி முடித்து புறப்படும் நேரத்தில் அவர்களை நெருங்கிய முதியவர் ஒருவர், மன்னிக்கவேண்டும், இது கிறிஸ்துமஸ் நேரம் என்று எனக்குத் தெரியும், ஆனால், என் மனைவி உடல் நலமில்லாமல் இருக்கிறாள். அவளுக்காக நான் உங்களை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளட்டுமா என ஹரி கிரெஸிடா ஜோடியிடம் கேட்டிருக்கிறார். கிரெஸிடா, அதற்கென்ன, தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூற, ஹரியோ, விலகிப்போ என சத்தமிட்டுவிட்டு அங்கிருந்து வேகவேகமாக வெளியேறிவிட்டாராம்.
காதலர் தினத்தில் நடந்த பிரச்சினை
ஒரு காதலர் தினத்தன்று ஹரியும் கிரெஸிடாவும் உணவகம் ஒன்றிற்கு காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, ஜோடியை புகைப்படம் எடுப்பதற்காக புகைப்படக்கலைஞர் ஒருவர் காத்திருப்பதாக ஹரிக்கு தகவல கிடைத்துள்ளது.
உடனே காரின் பிரேக்கை பலமாக மிதித்த ஹரி, சாலையின் நடுவில் பயங்கரமாக ஒரு வட்டமடித்து பீட்ஸா கடை ஒன்றிற்கு கிரெஸிடாவை அழைத்துச் சென்றுவிட்டாராம். காதலர் தினத்தன்றே இப்படி ஒரு விடயம் நடக்குமானால், அந்த உறவு நீடிக்காது என கிரெஸிடாவின் குடும்ப நண்பர் ஒருவர் அவரிடம் கூறியிருக்கிறார்.
இதுபோக, எட்டு மாதக் குழந்தை ஜார்ஜையும் அழைத்துக்கொண்டு வில்லியம் கேட் தம்பதியர் அவுஸ்திரேலியா சென்ற அரசு முறைப்பயணம் தொடர்பான காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த கிரெஸிடாவுக்கு பயம் ஏற்பட்டுவிட்டதாம்.
தனக்கு ஒரு சிறு குழந்தை இருந்தால், தான் அந்தக் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கவிரும்புவேனே தவிர, அப்படி ஒரு சிறு குழந்தையையும் இழுத்துக்கொண்டு உலகம் சுற்ற விரும்பமாட்டேன் என்று வெளிப்படையாகவே ஹரியிடம் கூறியிருக்கிறார் கிரெஸிடா.
இப்படி பல விடயங்கள் ஹரியுடனான வாழ்க்கை நமக்கு சரிப்பட்டு வராது என்ற எண்ணத்தை உருவாக்கவே, ஹரியைப் பிரிந்திருக்கிறார் கிரெஸிடா.