ஹரி மேகன் தம்பதியர் பொதுமன்னிப்புக் கோர திட்டம்: ஊடகவியலாளர் பரபரப்பு தகவல்
ஹரியும் மேகனும், மீண்டும் ராஜ குடும்பத்துடன் இணையும் வகையில் பொதுமன்னிப்புக் கோர திட்டமிட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய இளவரசரான ஹரி, ராஜ குடும்ப மரபுகளுக்கு மாறாக, அமெரிக்க நடிகையும், விவாகரத்தானவருமான மேகன் மார்க்கலை திருமணம் செய்ததும், அதைத்தொடர்ந்து ராஜ குடும்பத்தில் எழுந்த பிரச்சினைகளும் அனைவரும் அறிந்ததே.
ஒரு கட்டத்தில், ராஜ குடும்பத்தைவிட்டும், பின், பிரித்தானியாவை விட்டும் வெளியேறி அமெரிக்காவில் குடியேறியது ஹரி குடும்பம்.
இழப்புகள்
ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஹரியும் மேகனும் மாறி மாறி மன்னரையும், ராணியையும், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரையும் குறித்து மோசமாக விமர்சனங்கள் முன்வைக்க, ஹரிக்கும் ராஜ குடும்பத்துக்கும் இடையில் பெரும் பிளவு உருவானது.

ஆனால், ஒரு கட்டத்தில், ராஜ குடும்பத்தை விட்டுப் பிரிந்ததால் ஏற்பட்ட இழப்புகளை ஹரி மேகன் தம்பதியருக்கு தெள்ளத்தெளிவாக புரியத் துவங்கின.
இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரும், அவர்களுடைய பிள்ளைகளும் ராஜ வாழ்வு வாழ, குடும்பத்தைப் பிரிந்து எங்கோ, பணத்துக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபடி, இளவரசர்களாக ராஜ அரண்மனையில் வாழவேண்டிய தங்கள் பிள்ளைகள் தாத்தா பாட்டி கூட இல்லாமல் தனியாக வாழ, ஹரி மேகன் தம்பதியருக்கு உண்மை புரிந்துள்ளது போல் தெரிகிறது.
பொதுமன்னிப்பு கோர திட்டம்
நடந்தது நடந்ததுதான், நடந்ததையும், இதுவரை இழந்ததையும், முன்பின் யோசிக்காமல் பேசிய வார்த்தைகளையும் யாராலும் மாற்ற முடியாது.
இந்நிலையில், இழந்த ராஜ குடும்பத்துடனான உறவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஹரி மேகன் தம்பதியர் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஆகவே, இருவரும், மன்னர் சார்லசிடம் பொதுமன்னிப்புக் கோர திட்டமிட்டுவருவதாக, ராப் ஷட்டர் என்னும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

நடந்ததை எல்லாம் சொல்லி, நாங்கள் இந்த தவறையெல்லாம் செய்தோம், எங்களை மன்னியுங்கள் என நீளமாக சொல்லிக்கொண்டிருக்க முடியாது.
ஆகவே, தாங்கள் என்னவெல்லாம் செய்தோம், அதற்காக தங்களை மன்னிக்கவேண்டும் என்று சொல்லாமல், கடந்து ஐந்து ஆண்டுகள் குடும்பத்தை பிரிந்திருந்த விடயம் எவ்வளவு வலியை, வேதனையை ஏற்படுத்தியது என்பதை ஒப்புக்கொள்வதுதான் இந்த பொதுமன்னிப்பின் நோக்கம் என்கிறார் ஷட்டர்.
மன்னர் சார்லசைப் பொருத்தவரை, அவர் சமாதானத்தை விரும்புகிறார். அதே நேரத்தில் அவருக்கு மரியாதையும் அவசியம். ஆக, இவ்விரண்டு விடயங்களையும் கருத்தில் கொண்டு, எப்படி மன்னிப்புக் கோருவது என்பது குறித்துதான் ஹரி மேகன் தம்பதியர் திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கிறார் ஷட்டர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |