ஹரியும் மேகனும் பிரிவதாக வெளியாகிவரும் செய்திகள்: தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர் விளக்கம்
இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் பிரிய இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அது குறித்து தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
ஆளுக்கொரு பக்கம் செல்லும் ஹரியும் மேகனும்
எங்கு சென்றாலும், மனைவியுடனேயே செல்லும் இளவரசர் ஹரி தனியாக ஆப்பிரிக்கா செல்கிறார். கணவனின் கையைப் பிடித்துக்கொண்டு அவரது முகத்தைப் பார்த்தபடியே நடக்கும் மேகன், தனியாக புராஜக்ட்கள் செய்ய முடிவு செய்துள்ளார்.
Image: Getty Images for Global Citizen
ஹரியுடைய ஸ்பேர் புத்தகத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் மேகன் கலந்துகொள்ளவில்லை. ஆக, கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரச்சினை. அவர்கள் இருவரும் பிரியப்போகிறார்கள் என செய்திகள் வெளியாகிவருகின்றன.
தம்பதியருக்கு நெருக்கமான நபர் அளித்துள்ள விளக்கம்
ஆனால், தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர், ஹரியும் மேகனும், தங்களைக் குறித்து வெளியாகிவரும் வதந்திகளால் சலிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Image: Getty Images
மேலும், ராஜ குடும்ப விமர்சகரான Lara Asprey என்பவர் கூறும்போது, ஹரி, மேகன், இருவருமே உடைந்த குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு அந்த கஷ்டம் தெரியும். ஆகவே, அதே கஷ்டத்தை அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்பமாட்டார்கள் என்கிறார்.
அதே நேரத்தில், இருவரும் ஆளுக்கொரு வேலையில் கவனம் செலுத்துவதிலிருந்து இருவரும் பிரிவதற்கான அடையாளங்கள் தெரிவதை மறுப்பதற்கில்லை என்று கூறும் Lara, வேலைகள் தம்பதியரை ஆளுக்கொரு பக்கம் இழுக்கின்றன. அதனால் என்ன ஆகும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |