ஹரி மேகன் விவாகரத்து: மேகன் விதித்துள்ள நிபந்தனைகள்
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் ஒருபக்கமும், அது உண்மையில்லை, வதந்தி என செய்திகள் மறுபக்கமும் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.
இந்நிலையில், தன்னை விவாகரத்து செய்ய, பல நிபந்தனைகளை மேகன் விதித்துள்ளதாக, சில ராஜ குடும்ப நிபுணர்களை மேற்கோள் காட்டி, தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
மேகன் விதித்துள்ள நிபந்தனைகள்
தனக்கு பெருந்தொகை ஒன்று ஜீவனாம்சமாக வழங்கப்படவேண்டும், குறைந்தபட்சம் 80 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படவேண்டும் என்றும், தங்கள் பிள்ளைகள் ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை வளர்க்கும் உரிமை தனக்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்றும் மேகன் நிபந்தனை விதித்துள்ளாராம்.
விவாகரத்து செய்யும் ஹரியின் கோரிக்கைக்கு இணங்கவேண்டுமானால், தனக்கு கொடுக்கப்பட்ட சசெக்ஸ் கோமகள் என்னும் பட்டத்தை தான் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்றும் மேகன் நிபந்தனை விதித்துள்ளாராம்.
Parker Johnson
வெளியாகியுள்ள மற்றொரு முக்கிய தகவல்
இதற்கிடையில், மன்னர் சார்லசும் ஹரியும், தங்களுக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து ஒன்றுசேர்ந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர், தன் மூத்த மகன் வில்லியமுடன் இணைந்து, எப்படியாவது தன் இளைய மகன் ஹரியின் விவாகரத்தை இறுதிசெய்ய உதவ, தன்னாலான உதவிகளைச் செய்ய ஆயத்தமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |