அமெரிக்காவில் இளவரசர் வில்லியம் தனியாக செய்த செயலால் ஹரி மேகன் தம்பதியருக்கு மூக்கறுப்பு...
பிரித்தானிய இளவரசர் வில்லியம் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், அவர் செய்த செயலொன்றைப் பாராட்டியுள்ள மக்கள், அதே நேரத்தில், அதை வைத்தே இளவரசர் ஹரியையும் அவரது மனைவியையும் மோசமாக விமர்சித்துள்ளனர்.
அமெரிக்கர்களை வியப்படைய வைத்த வில்லியம்
Earthshot Prize என்னும் சுற்றுச்சூழலுக்கான விருதொன்றை உருவாக்கியவர் இளவரசர் வில்லியம். பின்னர், அது ஒரு தொண்டு நிறுவனமாக மாற்றப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போருக்கு இந்த விருது வழங்கப்படும்.
தற்போது, அமெரிக்காவில் சுற்றுச்சூழல் தொடர்பிலான Earthshot Prize Innovation Summit என்னும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதற்காக இளவரசர் வில்லியம் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் நியூயார்க்கிலுள்ள புகழ் பெற்ற பூங்கா ஒன்றில் அதிகாலை ஜாகிங் சென்றுள்ளார். அதை அறிந்து பலரும் பெரும் வியப்படைந்துள்ளனர்.
வில்லியமுக்கு பாராட்டு, ஹரி மீது விமர்சனம்
இந்த விடயம் குறித்து முன்னாள் ட்விட்டர், இந்நாள் எக்ஸில் கருத்து தெரிவித்துள்ள ஒருவர், வருங்கால பிரித்தானிய மன்னராக இருக்கும் நிலையிலும், உலகின் மிகப் பிரபலமான பூங்கா ஒன்றில் தனியாக ஜாகிங் சென்றுள்ளார் இளவரசர் வில்லியம்.
தன்னை பாப்பராஸி புகைப்படக்காரர்கள் துரத்துவதாக அவர் எந்த போலியான நாடகமும் போடவில்லை, Montecitoவில் உட்கார்ந்திருக்கும் சுயநலவாதிகள் இரண்டு பேர் (இளவரசர் ஹரியும் மேகனும்) இதை கவனிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |