இளவரசர் ஹரியும் மேகனும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட இவர்தான் காரணம்: பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண்
இளவரசர் ஹரியும் மேகனும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட இளவரசர் வில்லியம்தான் காரணம் என பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் இளவரசர் ஆண்ட்ரூவின் தோழியாகிய ஒரு பெண்.
இளவரசர் வில்லியமுக்கு மகிழ்ச்சி இல்லை
இளவரசர் வில்லியமும் கேட்டும், கென்சிங்டன் மாளிகையிலிருந்து சற்று ரிலாக்ஸ் ஆக வாழ்வதற்காக விண்ட்ஸர் எஸ்டேட்டுக்கு குடிபெயர்ந்தார்கள். ஆனால், அங்கு அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்கிறார் இளவரசர் ஆண்ட்ரூவின் தோழியாகிய Lady Victoria Hervey.
இளவரசர் ஆண்ட்ரூவை காலி செய்ய திட்டம்
ஆகவே, இளவரசர் ஆண்ட்ரூ வாழும் அவரது வீடாகிய ராயல் லாட்ஜிலிருந்து அவரை காலி பண்ண வைத்துவிட்டு, அங்கு இளவரசர் வில்லியமும் கேட்டும் குடிபெயர விரும்புவதாக பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்ற முன்வைத்துள்ளார் Lady Victoria Hervey.
Image: Getty Images
பிராக்மோர் இல்லத்தில் இருந்து ஹரி மேகனை காலி செய்ய வைத்துவிட்டு, அதாவது ஹரிக்குச் சொந்தமான பொருட்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, ஆண்ட்ரூவை அங்கு அனுப்புவது திட்டம்.
ஆண்ட்ரூ ராயல் லாட்ஜை காலி செய்ததும், அங்கு வில்லியமும் கேட்டும் குடியேற திட்டமிட்டுள்ளார்கள் என்கிறார் Lady Victoria Hervey.
அந்த வீடு ஆண்ட்ரூவுக்கு கொடுக்கப்படவேண்டும் என்பது மறைந்த மகாராணியாரின் கடைசி ஆசை. ஆனால், மன்னர் சார்லஸ் அவரை வெளியேற்ற விரும்புகிறார் என்கிறார் Lady Victoria Hervey.
Image: Dave Benett/Getty Images for Kau
Image: UK Press via Getty Images
Image: Getty Images